கந்து வட்டி கொடுமை: சேலத்தில் ஜவுளிக் கடை ஊழியர் குடும்பத்துடன் தற்கொலை
சேலம்:
வறுமை, கந்து வட்டி கொடுமை காரணமாக சேலத்தில் ஒரு ஜவுளிக் கடை குமாஸ்தா தன் குடும்பத்தினருடன்விஷம் கலந்த உணவைச் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் குகை சிங்காரப்பேட்டை தெற்குத் தெருவைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் (53) என்பவர் ஒரு ஜவுளிக் கடையில்குமாஸ்தாவாக வேலை பார்த்து வந்தார். அவருக்கு சாந்தாமணி (48) என்ற மனைவியும் லோகேஸ்வரன் (18)என்ற மகனும் ஜெயஸ்ரீ (14) என்ற மகளும் இருந்தனர்.
மாதம் தோறும் கிடைத்து வந்த சொற்ப சம்பளத்தைக் கொண்டு ஜெயச்சந்திரன் மிகவும் சிரமப்பட்டு குடும்பம்நடத்தி வந்தார். இதனால் தன் மகனுடைய படிப்பை நிறுத்திவிட்டு அவரையும் ஜவுளிக் கடைக்கு வேலைக்குஅனுப்பினார்.
இந்நிலையில் கைத்தறித் தொழில் மிகவும் நசியத் தொடங்கவே, ஜவுளிக் கடைகளிலும் விற்பனை குறையத்தொடங்கியது. இதனால் சில மாதங்களுக்கு முன் ஜெயச்சந்திரன் வேலையும் பறிபோனது.
இதையடுத்து குடும்பத்தில் மேலும் வறுமை கோரமாகத் தாண்டவமாடியது. 6ஆம் வகுப்பு படித்து வந்த ஜெயஸ்ரீக்குகந்து வட்டி மூலம் கடன் வாங்கி படிப்புக் கட்டணத்தைச் செலுத்தினார்.
அவளை எப்படியாவது படிக்க வைக்க வேண்டுமே என்ற ஆவலில்தான் அவர் கந்து வட்டிக்குக் கடன் வாங்கினார்.ஆனால் வட்டித் தொகை படிப்படியாக வளர்ந்து ஜெயச்சந்திரனைக் கடுமையாக மிரட்டத் தொடங்கியது.
இருந்தாலும் லோகேஸ்வரன் தொடர்ந்து வேலை பார்த்து வந்ததால் ஓரளவுக்கு இழுத்துக் கட்டி அவர்கள்குடும்பத்தை ஓட்டினார்கள். இந்நிலையில் அவர் வேலை பார்த்து வந்த ஜவுளிக் கடையும் திடீரென மூடப்பட்டது.
தாங்கள் தங்கியிருந்த வாடகை வீட்டுக்கு அட்வான்சாகக் கொடுத்திருந்த ரூ.7,500 பணத்தை வாடகை மூலம்கழித்து வந்தார் ஜெயச்சந்திரன். கந்து வட்டிக்குப் பணம் கொடுத்தவர்களும் நெருக்கத் தொடங்கினர்.
அவருடைய வறுமையை உணர்ந்த அவருடைய சகோதரர்கள் ஜெயச்சந்திரனுக்கு உதவ முன் வந்தனர். ஆனால்தன்மானம் காரணமாக அவர்களிடம் அவர் பணம் வாங்கவில்லை.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக ஒரு வேளை சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் தவித்து வந்த ஜெயச்சந்திரன்,குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவெடுத்தார். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு ரசம் சாதத்தில்விஷத்தைக் கலந்து ஜெயச்சந்திரன், சாந்தாமணி, லோகேஸ்வரன் மற்றும் ஜெயஸ்ரீ ஆகிய 4 பேரும் அதைச்சாப்பிட்டனர்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குருமூர்த்தி உடனடியாகப் போலீசாருக்குத் தகவல் அளித்தார். போலீசார் விரைந்துவந்து வீட்டின் கதவை உடைத்து 4 பேரின் உடல்களையும் கைப்பற்றினர். இது தொடர்பாகத் தீவிர விசாரணையும்நடந்து வருகிறது.
வறுமை, கந்து வட்டி கொடுமை காரணமாக குடும்பமே தற்கொலை செய்திருப்பது சேலம் பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications