போலீஸ் வேலை: ஓட்டப் போட்டியில் வாலிபர் மயங்கி விழுந்து சாவு
கோயம்புத்தூர்:
போலீஸ் வேலையில் சேருவதற்கு நடத்தப்பட்ட ஓட்டப் போட்டியின்போது ஒரு வாலிபர் மயங்கி விழுந்துஇறந்தார்.
கோவை அருகே சோழன்மாதேவியில் இச் சம்பவம் நடந்தது.தமிழகத்தில் 8,000 காவலர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதற்கு 3லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களில் உடல் திறன் மிக்கவர்களைச் தேர்வு செய்ய மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள போலீஸ்மைதானங்களில் ஓட்டப் போட்டிகள், கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டுவருகின்றன.
சோழன்மாதவேயில் உள்ள மைதானத்திலும் இன்று உடல் திறன் போட்டிகள் நடத்தப்பட்டன. இதன் ஒரு பகுதியாக1,500 மீட்டர் ஓட்டப் போட்டி நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான வாலிபர்கள் பங்கேற்று ஓடினர்.
இதில் உடுமலைப் பேட்டையைச் சேர்ந்த சுவாமிநாதன் (வயது 26) என்ற வாலிபரும் ஓடினார். மைதானத்தை 3முறை சுற்றி முடித்த நிலையில் அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனே போலீசார் அவரை மருத்துவமனைக்குஎடுத்துச் சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் இறந்துவிட்டார்.
அவர் மாரடைப்பால் உயிரிழந்தாக மருத்துவர்கள் தெரிவித்தனர். போலீஸ் வேலையில் சேருவதற்காக வந்தஇடத்தில் நடந்த வாலிபரின் மரணம் அங்கிருந்த அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications