இன்று மிலாடி நபி: தலைவர்கள் வாழ்த்து
சென்னை:
மிலாடி நபி தினத்தை முன்னிட்டி, தமிழக ஆளுனர், முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்
நபிகள் நாயகத்தின் பிறந்த நாளான மிலாடி நபி உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி தமிழக ஆளுனர் ராம் மோகன் ராவ் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், நபிகள் நாயகம் போதித்த நல்லொழுக்கம், கட்டுப்பாடு ஆகியவை இந்தக் காலத்திற்கும் பொருந்தும். அதைக் கடைப்பிடிக்க அனைவரும் உறுதி பூண வேண்டும் என்று கூறியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள செய்தியில், இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்லாது, உலக மக்கள் அனைவருக்கும் கிடைத்த அருட் கொடைதான் நபிகள் நாயகம் அவர்கள். அவர் போதித்த சாந்தி, சமாதானம், சகோதரத்துவம் ஆகியவை இப்போதும் தேவையாக உள்ளது.
அவர் போதித்த அமைதி, இன்பம், ஒழுக்கம் ஆகியவை சிறக்கவும், சமரசம் தழைக்கவும் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications