ரெளடியை பிடிக்க போய் திருடனானசப்-இன்ஸ்பெக்டர்
மதுரை:
ரெளடியைப் பிடிக்க வந்த சப்-இன்ஸ்பெக்டரை திருடன் என நினைத்த பொதுமக்கள் அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர்.
மதுரை அருகே இச் நடந்துள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒரு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மதுரை அருகே உள்ள பெருங்குடி பகுதிக்கு வந்தார். அங்கு மறைந்திருந்த ஒரு ரெளடியைப் பிடிப்பதற்காக அவர் அங்கு வந்துள்ளார்.
சீருடையில் இல்லாமல், சாதாரண உடையில் இருந்த அவர் அப்பகுதியில் உள்ள பம்புசெட் அருகே மறைந்திருந்தார்.
பம்புசெட் அருகே யாரோ மறைந்திருப்பதைப் பார்த்த பொதுமக்கள், திருடன் என்று நினைத்தனர். ஒன்று திரண்டு அந்த சப் இன்ஸ்பெக்டரை சரமாரியாக அடித்து உதைத்தனர். தன்னை போலீஸ் அதிகாரி என்று அவர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கூட கேட்காமல், கை, கால்களைக் கட்டி பம்பு செட் அறைக்குள் வைத்துப் பூட்டினர்.
அறைக்குள் பூட்டப்பட்ட சப் இன்ஸ்பெக்டர் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில், தனது பேண்டுக்குள் மறைத்து வைத்திருந்த வாக்கி டாக்கி மூலம் பெருங்குடி காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டு தகவலைத் தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த பெருங்குடி போலீஸார் விரைந்து சப் இன்ஸ்பெக்டரை மீட்டனர்.
உள்ளூர் போலீஸாரிடம் சொல்லாமல் கொள்ளாமல் வந்து விட்டதால்தான், புதுக்கோட்டை சப் இன்ஸ்பெக்டருக்கு இந்த கதி நேர்ந்தது என்று பெருங்குடி போலீஸார் தெரிவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications