மின்னல் தாக்கி 150 டி.விகள் காலி!
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் தாரமங்கலம் அருகே மின்னல் தாக்கியதில் கேபிள் டிவி ஆபரேட்டரின் வீடுஉடைந்தது. இவரது டிஷ் ஆன்டெனா வழியாக கேபிள் இணைப்புப் பெற்றிருந்த 150 வீடுகளில்டிவி பெட்டிகளும், தொலைபேசிகள் வெடித்துச் சிதறின.
தாராபுரம் அருகே உள்ள அழகியம் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவர் டிஷ்ஆண்டெனா வைத்து கேபிள் டிவி இணைப்புகள் கொடுத்துள்ளார்.
நேற்று இப் பகுதியில் பலத்த இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. அப்போது இவரது டிஷ்ஆண்டெனாவை மின்னல் தாக்கியது. மின்னலுடன் ஆண்டெனா வழியாகப் பாய்ந்த உயர் மின்அழுத்தம் வீட்டில் இருந்த பொருள்களுக்கும் பரவியது.
டிவி வெடித்துச் சிதறியது. வீட்டின் மேல் பகுதியும் உடைந்து விழுந்தது. சுவரில் சாயந்துஉட்கார்ந்திருந்த ராஜசேகரின் மனைவி பிரேமா மீதும் மின்சாரம் பாயந்ததில் அவர் தூக்கிஎறியப்பட்டார். மின்தாரம் தாக்கியதில் உடலில் பலத்த தீக்காயங்களும் ஏற்பட்டன.
அதே போல இந்த டிஷ் ஆண்டெனா வழியாகப் பாய்ந்த உயர் மின் அழுத்தம் கேபிள்களுக்குப்பரவியது. இந்தக் கேபிள்களில் இணைக்கப்பட்டிருந்த 150 வீடுகளின் டிவிகளிலும் உயர் மின்சாரம்பாய்ந்தது.
இதில் அத்தனை டிவிகளும் கருகின. சில டிவிகளில் தீப் பிடித்துக் கொண்டன. இந்தக் கேபிள்களைஒட்டி இருந்த தொலைபேசிக் கம்பிகளிலும் மின் அழுத்தம் பரவி தொலைபேசிகளும் கூடகருகிவிட்டன.
இதனால் சுமார் ரூ. 40 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இடி, மின்னலுடன் மழை பெய்யும் போது டிவியின் ஆண்டெனா இணைப்பையும் கேபிள் இணைப்புகளையும்அகற்றிவிடுவது மிக அவசியமாகும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications