ஜெயாவுக்கு மிக பெரிய தண்டனை காத்திருக்கிறது: வைகோ
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் 9 மதிமுகவினர்மீதான வழக்கில் வழக்கறிஞர்களின் வாதம் வரும் 27ம் தேதி தொடங்கவுள்ளது.
பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இவர்கள் இன்று காவல் நீட்டிப்புக்காக பூந்தமல்லி பொடா நீதிமன்றம்கொண்டு வரப்பட்டனர். அப்போது பேசிய வைகோவின் வழக்கறிஞர், பொடா வழக்கை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில் தீர்ப்பு கூறப்படும் வரை வழக்கறிஞரின் வாதத்தை நீதிபதி ஒத்தி வைக்கவேண்டும் என்றார்.
ஆனால், இதை நீதிபதி ராஜேந்திரன் ஏற்க மறுத்துவிட்டார். வரும் 27ம் தேதி இந்த வாதம் தொடங்கும் என்றுஅறிவித்தார். மேலும் வைகோ மற்றும் 8 பேரின் சிறைக் காவலையும் 27ம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்தார்.
இதன் பின்னர் பேசிய வைகோவின் வழக்கறிஞர், மதிமுகவினரையும் வழக்கறிஞர்ளையும் வைகோவைச் சந்திக்கவிடாமல் போலீசார் தடுக்கின்றனர் என்றார்.
இதைக் கண்டித்த நீதிபதி, நீதிமன்ற வளாகத்திலேயே மதிமுகவினரை வைகோ சந்திக்கலாம். இதற்கு போலீசார்அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதன் பின்னர் நீதிமன்றத்துக்கு வெளியே வந்த வைகோ நிருபர்களிடம் பேசுகையில், நான் நீதிமன்றத்தைநம்புகிறேன். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறேன்.
ஜெயலலிதாவின் பழி வாங்கல்கள் எல்லை மீறிவிட்டன. மதிமுக தலைமையகத்தில் ஊழியர் ஒருவரைஅதிமுகவினரை விட்டுத் தாக்கிவிட்டு அடி வாங்கியர் மீதே பொய் வழக்கு போட்டுள்ளனர். சிறையில் என்னைஸ்டாலின் சந்தித்து மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் ஏற்படுத்தியது.
பழைய நினைவுகளில் நாங்கள் மூழ்கினோம். அவர் என்னை சந்தித்ததால் என் துன்பங்கள் எல்லாமேபறந்தோடிவிட்டன.
1996ல் செயத தவறுக்காக ஜெயலலிதாவுக்கு மக்கள் சரியான தண்டனை வழங்கினர். இப்போது அவர் செய்துகொண்டிருக்கிற தவறுகளுக்கு எல்லாம் இன்னும் சிறிது காலத்தில் அதை விடப் பெரிய தண்டனை காத்திருக்கிறதுஎன்றார் வைகோ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications