பிளஸ் டூவில் தோல்வி: 5 மாணவிகள் தற்கொலை
சென்னை:
பிளஸ் டூ தேர்வில் தோல்வியடைந்த 4 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் ஒரு மாணவிரிசல்ட் வருவதற்கு முன்னதாகவே தோல்வி பயத்தில் தற்கொலை செய்து கொண்டார். இன்னொரு மாணவி தேர்ச்சிபெற்றும் கூட குறைந்த மார்க் எடுத்ததால் பயந்து தற்கொலை செய்து கொண்டார்.
லாவண்யா:
மதுரை, ஆத்திக்குளம் பகுதியில் உள்ள அங்கயற்கன்னி காலனியைச் சேர்ந்தவர் லாவன்யா. பிளஸ் டூ தேர்வுஎழுதியிருந்தார். ரிசல்ட் வந்தபோது அவர் குறைந்த மதிப்பெண்கள் பெற்று பாஸ் செய்திருந்தது தெரியவந்தது.
டாக்டருக்குப் படிக்க வேண்டும் என்று நிறைய ஆசையுடன் இருந்த லாவன்யாவுக்கு இது அதிர்ச்சியைக்கொடுத்துள்ளது. எனவே அவர் வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சுதா:
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாகியைச் சேர்ந்த சுதா தேர்வில் தோல்வி அடைந்ததால் வீட்டில் அழுதவாறேஇருந்தார். இரவில் அனைவரும் தூங்கிய பின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார்.
உமா:
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொலக்கம்பை மலை கிராமத்தில் உள்ள எஸ்டேட்டில் வேலை செய்யும் கூலித்தொழிலாளியின் மகள் உமா, திருச்சி- தொட்டியம் பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். தேர்வு எழுதிவிட்டுசொந்த ஊரான கொலக்கம்பையில் தங்கியிருந்தார்.
தான் எதிர்பார்த்ததைவிட குறைவான மதிப்பெண்களே (1,200க்கு 867) கிடைத்ததால் உடலில் மண்ணெண்ணெய்ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.
வாசுகி:
சிவகாசி அருகே உள்ள கிராமம் மங்களம். இந்த ஊரைச் சேர்ந்த வாசுகி தேர்வில் தோல்வி அடைந்ததால் உடலில்தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.
கோமதி:
அதே போல வேதாரண்யத்தைச் சேர்ந்த கோமதி ஆங்கிலத்தில் 4 மார்க் குறைவான மதிப்பெண் பெற்றுதோல்வியடைந்தார். இதையடுத்து பூச்சி மருந்தைக் குடித்து அவர் தற்கொலை செய்து கொண்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications