பேச்சு தோல்வி: 1200 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சஸ்பெண்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தனியார் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க மாட்டோம் என அரசு உறுதிமொழி தர மறுத்ததால் இன்று தமிழகஅரசுடன் நடத்த இருந்த பேச்சுவார்த்தையை மருத்துவ மாணவர்கள் புறக்கணித்தனர். இதையடுத்து மாநிலம்முழுவதும் 1,200 மாணவர்களை அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது.

தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கக் கூடாது, கல்வி உதவித் தொகையை உயர்த்தவேண்டும் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி மாணவர்கள்நடத்தி வரும் போராட்டம் 4வது வாரத்தை எட்டியுள்ளது.

மாணவர்களுடன் அரசு நடத்திய பேச்சும் தோல்விடைந்தது. இதையடுத்து போராட்டம் தொடர்ந்து. இந் நிலையில்மாணவர்களுடன் மீண்டும் பேசத் தயார் என நலத்துறை அமைச்சர் செம்மலை அறிவித்தார். இதையடுத்து நேற்றுமருத்துவக் கல்லூரி மாணவர்களின் பிரதிநிதிகள் அமைச்சருடன் பேச்சு நடத்தினர்.

அப்போது கல்வி உதவித் தொகையை உயர்த்த அரசு ஒப்புக் கொண்டது. ஆனால் தனியார் மருத்துவக் கல்லூரிகள்விஷயத்தில் எந்த உறுதிமொழியையும் மாணவர்களுக்கு அளிக்கவில்லை. இந் நிலையில் இன்றும் பேச்சுவார்த்தைதொடரும் என நலத்துறை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்திருந்தார்.

அதே போல தங்களது கோரிக்கைகளை மாணவர்கள் எழுத்துப்பூர்வமாக வழங்க வேண்டும் எனவும் அரசுவலியுறுத்தியது.

இதையடுத்து இன்று மாணவர்கள் தங்களது கோரிக்கைகள் குறித்த மனுவை மருத்துவக் கல்வித்துறை இயக்குனர்ரவீந்திரநாத்திடம் நேரில் வழங்கினர். அதில், கூறப்பட்டிருந்ததாவது:

தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி தருவது தொடர்பான மாநில அரசின் ஆணை வாபஸ் பெறப்படவேண்டும். அதே போல 100 கி.மீ. தூரத்துக்குள் இரு மருத்துவக் கல்லூரிகள் இருக்கக் கூடாது என்றஆணையையும் ரத்து செய்துவிட்டு அரசே அதிக மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க வேண்டும். தனியாருக்குகல்லூரிகளைத் தொடங்க அனுமதி தந்து மருத்துவக் கல்வியை வியாபாரமாக்கக் கூடாது.

மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மாநில அரசுகளுக்கே அதிகாரம் இருக்க வேண்டும். இது தொடர்பாக மத்தியமருத்துவக் கவுன்சிலை மாநில அரசு வலியுறுத்த வேண்டும்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளை எதிர்க்கிறோம் என மாநில அரசு எழுத்துப்பூர்மாக உறுதியளிக்க வேண்டும்.இந்த உறுதிமொழிகளை அரசு தராத வரை எங்களது போராட்டம் தொடரும். இவ்வாறு மாணவர்கள் தங்களதுமனுவில் கூறியுள்ளனர்.

எல்லை மீறுகின்றனர்: செம்மலை

இது குறித்து நலத்துறை அமைச்சர் செம்மலை கூறுகையில், மாணவர்களின் பல கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டுள்ள நிலையிலும் மேலும் மேலும் எங்களை அவர்கள் நெருக்கி வருவது ஏற்கத் தக்கதலல. அவர்கள்எல்லை மீறிப் போய்க் கொண்டுள்ளனர்.

தனியார் கல்லூரிகள் விவகாரம் முற்றிலும் மத்திய அரசு சம்பந்தப்பட்டது. அதுதொடர்பாகமறுபடியும், மறுபடியும் மாணவர்கள் வலியுறுத்தி வருவது அவர்களது பிடிவாதப் போக்கையேக்காட்டுகிறது. அவர்கள் தங்களது எல்லையை மீறி, வரம்பு மீறி நடக்கிறார்கள். அவர்களது செயல்மிரட்டுவது போல உள்ளது. இதை ஏற்க முடியாது.

உடனே, அவர்கள் வகுப்புகளுக்குத் திரும்பாவிட்டால் கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.அது தொடர்பான நடவடிக்கைகளை மருத்துவக் கல்வி இயக்குனரகம் மேற்கொண்டுள்ளது என்றார்அவர்.

1,200 மாணவர்கள் சஸ்பெண்ட்?:

இந் நிலையில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தி வரும் 1,200 மருத்துவக் கல்லூரி மாணவர்களையும் சஸ்பெண்ட் செய்துள்ளதாகஅரசு அறிவித்துள்ளது.

மருத்துவக் கல்வித்துறை இயக்குனர் ரவீந்திரநாத் கூறுகையில்,

இது தொடர்பான நோட்டீஸ்கள் மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் அனுப்பப்பட்டுவிட்டன.

கல்லூரியில் சேரும்போது, ஸ்டிரைக் போன்றவற்றில் ஈடுபட மாட்டோம் என்று மாணவர்கள்உறுதிமொழி அளித்துள்ளனர். ஆனால் அதை மீறி தற்போது ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். சட்டவிரோதமாக போராட்டம் நடத்தி வரும் இந்த மாணவர்களை கல்லூரியிலிருந்து ஏன் சஸ்பெண்ட் செய்யக்கூடாது என்று நோட்டீசில் கேட்டுள்ளோம்.

சஸ்பெண்ட் ஆகியுள்ள மாணவர்களால் இந்த ஆண்டு அவர்கள் தேர்வு எழுத முடியாது.

போராட்டத்தை கைவிட மறுத்தால் கல்லூரிகளில் இருந்து இந்த மாணவர்களை நிரந்தரமாக நீக்கவும் கூட அரசுக்குஅதிகாரம் உண்டு. மாணவர்கள் பணியாவிட்டால் அதையும் செய்வோம்.

இதுதவிர, பயிற்சி டாக்டர்களுக்கு வழங்கப்படும் நற்சான்றிதழில், போராட்டத்தில் ஈடுபட்டவர்என்ற குறிப்பு இடம் பெறும் என்றும் ரவீந்திரநாத் கூறியுள்ளார். இதனால் அவர்கள் தங்களைடாக்டர்களாக பதிவு செய்ய முடியாத நிலை ஏற்படும்.

இதனால் மாணவர்கள், பயிற்சி டாக்டர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. தங்களதுபோராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+