சூலம் வைத்திருக்க சொல்வது துறவிக்கு அழகா?: சங்கராச்சாரியாருக்கு கருணாநிதி கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அகிம்சையை போதித்த காந்தியடிகள் பிறந்த நாட்டில் துறவிகளே திரிசூலம் வைத்துக் கொள்ளச் சொல்வதுநியாயம் தானா என்று காஞ்சி சங்கராச்சாரியாருக்கு திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று மதுரையில் பேசிய சங்கராச்சாரியார், விஸ்வ ஹிந்து பரிஷத் நடத்தும் சூல வினியோகத்தில் எந்தத் தவறும்இல்லை. அது இந்துக்களின் புனிதச் சின்னம் தான் என்று கூறியிருந்தார்.

இந் நிலையில் இன்று அண்ணா அறிவாலயத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வேலூர் மாவட்ட திமுக செயலாளர்காந்தியின் மகள் ஷில்பாவின் திருமணம் சுயமரியாதைப்படி நடந்தது. திருமணத்தை நடத்தி வைத்து கருணாநிதிபேசியதாவது:

இது காந்தி வீட்டுக் கல்யாணம். இன்னும் நாலைந்து நாளில் நேரு (முன்னாள் திமுக அமைச்சர்) வீட்டுத்திருமணமும் இங்கு நடக்க உள்ளது. கட்சிக்காக கடுமையான உழைத்தவர் இந்த காந்தி என்பதை நான் அறிவேன்.காந்தியைப் போன்றவர்கள் திமுகவுக்கு வராமலேயே நல்லமுறையில் வசதியாக வாழ்ந்திருக்க முடியும்.

ஆனால், இங்கு வந்து கஷ்மும் நஷ்டமும் அடைந்தாலும் இயக்கமே பெரிதென உழைப்பவர். காந்தியை முன்கோபிஎன்று முன்னாள் அமைச்சர் துரைமுருகன் குறிப்பிட்டார். என்னையும் முன்கோபி என்பார்கள். உண்மை தான். முன்புகோபம் இருந்தது. இப்போது இல்லை (அரங்கமே அதிரும் அளவுக்கு சிரிப்பொலி).

எதையும் ஒழுங்காக செய்பவர் காந்தி. ராணிப்பேட்டையில் இவர் வைத்துள்ள அண்ணா சிலைக்கு தினமும் மாலைமாற்றுகிறார். பல இடங்களில் அடுத்த பிறந்த நாள் வரை அண்ணாவுக்கு பழைய மாலையே தொங்கிக்கொண்டிருப்பதையும் பார்த்திருக்கிறேன்.

சீக்கியர்கள் கத்தி வைத்திருப்பதைப் போல இந்துக்கள் சூலம் வைத்துக் கொள்ளலாம் என்று பேசியிருக்கிறார்இப்போதைய காஞ்சி சங்கராச்சாரியார்.

பெரிய சங்கராச்சாரியாரை நான் அறிவேன். பார்த்தது இல்லை. அந்தப் பெரியவருக்கும் இப்போதையசங்கராச்சாரியாருக்கும் உள்ள ஏற்றத் தாழ்வுகளை சங்கரமடத்தின் மீது அன்பு கொண்ட அனைவரும் அறிவார்கள்.பெரிய சங்கராச்சாரியார் இப்படியெல்லாம் பேசியதே கிடையாது.

ஆனால், இப்போது ஆயுதம் வைக்கச் சொல்லுபவர்கள் தான் வணக்கத்துக்குரிய துறவிகளாக இருக்கிறார்கள்.இவர்கள் இப்படி நடந்தால் நாட்டின் எதிர்காலம், இளைஞர்களின் எதிர்காலம் என்ன ஆகும்?

கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு என்ற குரல் வந்ததும் காஞ்சிபுரத்தில் இருந்தா தான். சூலாயுதம் தூக்குசுக்குமாந்தடி தூக்கு என்ற குரல் வருவதும் காஞ்சிபுரத்தில் இருந்து தான். ஆனால், அது அண்ணாவின் நாத்தீகக்குரல். இது சங்கராச்சாரியாரின் ஆத்தீகக் குரல் என்று கூறியிருந்தேன்.

இதற்கு பதில் சொன்ன சங்கராச்சாரியார் இது கருணாநிதி பாஷை என்று கூறி இருக்கிறார். பாஷை அல்ல மொழி.அண்ணா கூறியகு பொன்மொழி.

அகிம்சையை போதித்த காந்தி பிறந்த மண்ணில் வன்முறையைத் தூண்டு சூலம் வைத்துக் கொள்வது துறவிகளுக்குஅழகா?. ஏற்கக் கூடியது தானா?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+