இலங்கையில் பேய் மழை- வெள்ளப் பெருக்கு: 200 பேர் பலி- மீட்புப் பணியில் இந்திய கடற்படை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையில் பெய்த வரலாறு காணாத பேய் மழைக்கு 200 பேர் பலியாகியுள்ளர். மேலும்நூற்றுக்கணக்கானவர்களைக் காணவில்லை. லட்சக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பலஇடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இலங்கை அரசின் வேண்டுகோளை ஏற்று இந்தியக் கடற்படை மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

1947ம் ஆண்டுக்குப் பிறகு இலங்கையில் இப்படி ஒரு மழை இதுவரை பெய்தது இல்லை. கடந்த சில நாட்களாக 60ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 4 இன்ச்அளவுக்கு கன மழை பெய்தது. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.

இலங்கையின் தென் கிழக்குப் பகுதிகள், தென் மத்தியக் கிழக்குப் பகுதிகள் தான் இந்த வெள்ளத்தால் மிகவும்பாதிக்கப்பட்டுள்ளன. தமிழர்கள் அதிக அளவில் வசிக்கும் இந்தப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான கிராமங்கள்நீரில் மூழ்கியுள்ளன.

குறிப்பாக ரத்தினபுரா மாவட்டம் தான் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு மட்டும் சுமார் 1 லட்சம்வீடுகள் நீரால் சூழப்பட்டுள்ளன. வீடுகளில் வெள்ளம் புகுந்ததில் சுமார் 200 பேர் பலியாகிவிட்டனர். மேலும்நூற்றுக்கணக்கானவர்களைக் காணவில்லை. அவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

வீடுகளுக்குள் நீர் புகுந்ததால் மாடிகளில் ஏறி ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் தப்பியுள்ளனர். இவர்களுக்குஹெலிகாப்டர்கள் மூலம் உணவுப் பொட்டலஙகள் போடப்பட்டு வருகின்றன. மேலும் பல லட்சம் மக்கள் வீடுகளைஇழந்துள்ளனர்.

இந்த வெள்ளச் சேதத்தில் இருந்து மக்களை மீட்க பேருதவி தேவைப்படுவதாக பல நாடுகளுக்கும் இலங்கை அரசுகோரிக்கை விடுத்துள்ளது. மீட்புப் பணிகளில் உதவுமாறு இந்திய கடற்படைக்கும் இலங்கை அரசு கோரிக்கைவிடுத்தது.

இதையடுத்து இலங்கை போர்க் கப்பலான ஐ.என்.எஸ். சுஜாதா தலைமையில் 8 கடலோரக் காவல் படையின்கப்பல்களும் படகுகளும் இலங்கையில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.

இந் நிலையில் மேலும் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.இதனால் இலங்கையில் வெள்ள நிலைமை மேலும் மோசமாகும் என்று அஞ்சப்படுகிறது.

இதற்கிடையே இலங்கைக்கு மருத்துவ உதவிப் பொருட்களையும் இந்திய ராணுவ விமானங்கள் எடுத்துச் செல்லஆரம்பித்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+