சட்டமே காலாவதியான பின்னரும் இன்னும் நிலுவையில் இருக்கும் தடா வழக்குகள்!
சென்னை:
தடா சட்டம் காலாவதியாகி 7 ஆண்டுகள் ஆகியும் கூட, சென்னையில் உள்ள தடா நீதிமன்றத்தில் இன்னும் 12 தடாவழக்குகள் நிலுவையில் உள்ளன.
தடா சட்டம் கொண்டு வரப்பட்ட பின்னர் சென்னையில் இரண்டு தடா நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. இந்ததடா நீதிமன்றத்தில்தான் சென்னை சேத்துப்பட்டு ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டுவெடிப்பு வழக்கு உள்ளிட்டமுக்கியமான வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
தற்போது தடா சட்டம் நடைமுறையில் இல்லை. 7 ஆண்டுகளுக்கு முன்பே காலாவதியாகி விட்டது. இருப்பினும்இன்னும் 12 வழக்குகள் விசாரணை கட்டதிலேயே நிலுவையில் உள்ளன. இதில் முக்கியமானது ஆர்.எஸ்.எஸ்.அலுவலக குண்டுவெடிப்பு வழக்கு.
கடந்த 1993ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி,சென்னை சேத்துப்பட்டு பகுதியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில்குண்டுவெடித்தது. இதில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் 18 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 17 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
இவர்களில் 2 பேர் தற்போது உயிருடன் இல்லை. ஒருவர் இன்னும் தலைமறைவாக உள்ளார். 5 பேர் ஜாமீனில்விடுதலையாகினர். கைது செய்யப்பட்ட அல் உம்மா தலைவர் பாஷா உள்ளிட்ட 10 பேர் சிறைச் சாலைகளில்உள்ளனர்.
இந்த வழக்கில் மொத்தம் 431 சாட்சியங்கள் சேர்க்கப்பட்டன. இவற்றில் 230 பேரிடம் விசாரணை நடத்தவேண்டியுள்ளது. மற்றவர்களிடம் விசாரணை முடிந்து விட்டது.
வரும் மே 22ம் தேதி இந்த வழக்கு விசாரணை மீண்டும் வருகிறது.
இது தவிர, 3 வழக்குகள் மட்டுமே தடா நீதிமன்றத்தில் "உயிருடன்" உள்ள வழக்குகள். மற்ற வழக்குகள் கிடப்பில்போடப்பட்டுவிட்டன.
காரணம்,யார் குற்றவாளிகள் என்றே இன்னும் உறுதியாகத் தெரியாதது தான். இதனால் இந்த வழக்குகளைதொடர்ந்து நடத்த முடியவில்லை.
1993ம் ஆண்டு தர்மபுரி ரயில்வே தண்டவளாத்தில் குண்டுவைத்த வழக்கு, குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில்குண்டு வைத்த வழக்கு, விழுப்புரம் காந்தி சிலை மீதான தாக்குதல் வழக்கு ஆகியவை இன்னும் விசாரணையில்உள்ளன. காந்தி சிலை தாக்குதல் வழக்கில், தமிழர் விடுதலைப் படை, தமிழர் மீட்புப் படை நக்சலைட்டுகளுக்குத்தொடர்பு உள்ளது.
நீதிபதிகள் இடமாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தடா வழக்குகள் தாமதமாகிக் கொண்டுள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications