போராட்டம் செய்தால் டிஸ்மிஸ்: டாக்டர்களுக்கு அரசு எச்சரிக்கை
சேலம்:
தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கும் அரசு ஆணை 211-ஐ மாற்றும் பேச்சுக்கே இடமில்லைஎன்று சுகாதாரத் துறை அமைச்சர் செம்மலை கூறியுள்ளார்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான விதிமுறைகள் குறித்த விவரங்கள் அடங்கிய அரசு ஆணை 211 ரத்துசெய்ய வேண்டும் என்று மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கோரி வருகின்றனர். ஆனால் இவ்வாறு கோரஅவர்களுக்கு உரிமை இல்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் செம்மலை கூறியுள்ளார்.
சேலத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசு உத்தரவு தொடர்பாக கேள்வி எழுப்ப மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு எந்தவித உரிமையும் இல்லை. இந்த அரசு உத்தரவு, எந்த வகையில் அவர்களைப்பாதிக்கப் போகிறது என்பதை அவர்கள் தயவு செய்து விளக்க வேண்டும்.
டிஸ்மிஸ்:
அரசு டாக்டர்கள், மக்கள் பணத்திலிருந்து சம்பளம் பெற்று வேலை செய்கிறார்கள். எனவே மக்களை வறுத்தும்எந்த வித செயலையும் மேற்கொள்ள அவர்களுக்கு உரிமை இல்லை. இதையும் மீறி போராட்டத்தில் இறங்கினால்அவர்களை டிஸ்மிஸ் செய்வோம்.
தனியார் மருத்துவக் கல்லூரிகள் தரம் குறைந்தவை என்று கூறப்படும் வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. அரசுக்கல்லூரிகளுக்கு ஈடாகவே தனியார் மருத்துவக் கல்லூரிகளும் இயங்கும்.
டாக்டர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை சில அரசியல் கட்சிகள் தூண்டிவிட்டுவருகின்றன என்றார் அவர்.
ஆனால், இந்த மிரட்டலையும் மீறி திட்டமிட்டபடி 21ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்தொடங்கும் என அரசு மருத்துவர் சங்கத் தலைவர் பிரகாசம் அறிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications