வீட்டில் பிரபல டாக்டர், மனைவி, வேலைக்காரி படுகொலை

Subscribe to Oneindia Tamil

சேலம்:

Murdered doctor sreenivasan and maid Parvathiசேலம் நகரில் பிரபலமான கண் டாக்டர், அவரது மனைவி, வீட்டு வேலைக்கார பெண் ஆகியோர்பயங்கரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தனர்.

அவர்கள் கொல்லப்பட்டு 36 மணி நேரம் கழித்துத் தான் இந்தக் கொலைகள் குறித்தேதெரியவந்துள்ளது.

சேலம் பேர்லேன்ட்ஸ் பகுதியில் வசித்து வந்தவர் டாக்டர் சீனிவாசன் (61). மிகவும் பிரபலமான கண்டாக்டர். இவர் தனது மனைவி பேராசிரியர் மணிமேகலையுடன் (52), வசித்து வந்தார். மணிமேகலைசேலம் சாரதா கல்லூரியில் பொருளாதாரப் பேராசிரியையாக உள்ளார்.

பங்களாவில் சமையலுக்காக பார்வதி (24) என்ற வேலைக்காரப் பெண் இருந்தார்.

இரு மகன்களில் ஒருவரான சதீஷ் கண் டாக்டர். இவர் லண்டனில் வசிக்கிறார். இன்னொரு மகன்நிரஞ்சன், சாப்ட்வேர் இன்ஜினியர். இவர் அமெரிக்காவில் உள்ளார்.

திங்கள்கிழமை காலை சேலம் புறவழிச் சாலையில் இரு ஸ்கூட்டர் கேட்பாரின்றிக் கிடந்தது. அதைபோலீசார் கைப்பற்றினர். அதில், டாக்டர் சீனிவாசனின் இன்சூரன்ஸ் இருந்தது. இதையடுத்துபோலீசார் சீனிவாசனின் வீட்டுக்குச் சென்றனர்.

நெடுநேரம் காலிங் பெல் அடித்தும் யாரும் வீட்டைத் திறக்கவில்லை. இதையடுத்து கதவைத்தட்டியபோது அது திறந்து கொண்டது.

உள்ளே சென்ற போலீசார் அறை அறையாக சோதனையிட்டபோது ஒரு அறையில் நாறாகாலியில்டாக்டர் சீனிவாசன் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்தார். அதே அறையில் இருந்த மேஜை அருகேவேலைக்காரப் பெண் பார்வதி கொல்லப்பட்டு கிடந்தார்.

சமையல் அறையை ஒட்டிய டைனிங் அறையில் மணிமேகலை கொல்லப்பட்டுக் கிடந்தார்.

வீட்டிலிருந்த பீரோக்கள், அலமாறிகள் உடைக்கப்பட்டிருந்தன. பொருள் எல்லாம் சிதறிக் கிடந்தன.கயிறுகளும் கிடந்தன. இந்தக் கயிறுகளால் இவர்கள் கழுத்தை இறுக்கி பின்னர் கத்தியால் குத்திகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

Manimeghalais body lying in the pool of bloodவீடு மற்றும் அதை ஒட்டிய கிளினிக் அறைமுழுவதும் ரத்தக் கறை படிந்திருந்தது.ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த கொலைகள் நடந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.

இந்தக் குடும்பத்தை நன்றாகக் கண்காணித்த கொலைகாரர்கள் திட்டமிட்டு இதைச் செய்துள்ளதாகத்தெரிகிறது. வீட்டில்
கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என்றுதெரிகிறது.

(படங்கள் நன்றி- தினகரன்)

கத்தி மற்றும் அரிவாள்களால் இவர்கள் வெட்டியும் குத்தியும் கொல்லப்பட்டுள்ளனர். கொலைக்குப்பயன்படுத்தப்பட்ட ஒரு அரிவாள் மீட்கப்பட்டுள்ளது. கொலையைச் செய்துவிட்டு அவரதுஸ்கூட்டரையும் எடுத்துக் கொண்டு கொலையாளிகள் தப்பியுள்ளனர். பின்னர் அதை நடுரேட்டில்போட்டுவிட்டுப் போயுள்ளனர்.

வெளிநாடுகளில் உள்ள டாக்டரின் இரு மகன்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள்வந்தால் தான் கொள்ளை போன நகைகள், பணம் குறித்த விவரம் தெரியவரும்.

டாக்டரின் மாடியில் வீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் 3 மாணவிகள் சேர்ந்துதங்கியுள்ளனர். இவர்களுக்கும் கொலை நடந்தது தெரியுமா இல்லையா ன்று தெரியவில்லை.இப்போது இந்த மாணவிகளும் வீட்டில் இல்லை. அவர்கள் எங்கு சென்றார்கள் என்றுவிசாரிக்கப்பட்டு வருகிறது.

கொலையாளிகளைப் பிடிக்க தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக சேலம் மாநகர காவல்துறைஆணையர் சுனில் குமார் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+