வெயிலில் தகிக்கிறது தமிழகம்: தார் உருகி வழிகிறது
சென்னை:
சென்னை, வேலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் கடுமையான அனல் காற்று வீசியது.இதனால் சாலைகளில் பகல் நேரத்தில் மக்கள் நடமாட்டம் வெகுவாகக் குறைந்துவிட்டது.
மேலும் இரண்டு நாட்களுக்கு இந்த கடும் வெப்பம் தொடரும் என நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி நிலையம்அறிவித்துள்ளது.
கடந்த 4ம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திர காலம் வரும் 31ம் தேதி தான் முடிகிறது. இந்த அக்னி நட்சத்திரம்ஆரம்பித்தபோது வங்கக் கடலில் புயல் சின்னம் ஏற்பட்டதால் குளுமையான சூழல் நிலவியது.
ஆனால், புயல் தமிழகத்தை விட்டு தூரமாக ஓடி வலுவிலந்து கலைந்துவிட்டது. இதனால் சென்னை உள்படதமிழகத்தின் பல பகுதிகளிலும் கத்திரி வெயில் மண்டையைப் பிளக்கிறது.
பகல் நேரத்தில் வீட்டை விட்டு வெளியே எட்டிப் பார்க்க முடியாத அளவு கொடும் வெயில் அடிக்கிறது. வேலூர்நகரில் வெயில் கொடுமை ஆரம்பத்தில் இருந்தே அதிகமாக இருந்து வருகிறது. இப்போது இங்கு சராசரியாக 110டிகிரி வரை வெப்பம் பதிவாகி வருகிறது. இந்த வெப்பத்தை அரக்கோணம் மிஞ்சியிருக்கிறது. அங்கு நேற்று 115டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
அதே போல சென்னையில் 110 டிகிரியும், பாண்டிச்சேரியில் 108 டிகிரியும், மதுரை, சேலம், கடலூரில் 106டிகிரியும், திருச்சி, பாளையங்கோட்டை 105 டிகிரியும், நாகப்பட்டிணத்தில் 101 டிகிரியும் பதிவாகியுள்ளது.
இதனால் பல்வேறு பகுதிகளிலும் அனல் காற்று வீசியது. கடும் வெயிலால் ரோடுகளில் தார் உருகி வழிந்துவருகிறது.
நேற்று முதல் கொடுமை செய்து வரும் இந்த பயங்கர வெப்பம் மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என வானிலைஆராய்ச்சி நிலையம் மிரட்டியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications