மருத்துவ மாணவர் ஸ்டிரைக் வாபஸ்?
சென்னை:
மருத்துவக் கல்லூரி மாணவர் ஸ்டிரைக் இன்று மாலையுடன் விலக்கிக் கொள்ளப்படும் என்றுதெரிகிறது.
தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதிலும் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் கடந்த 28 நாட்களாக வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு ஸ்டிரைக்கில்இறங்கியுள்ளனர்.
அவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட அரசு டாக்டர்கள் திடீரென்று தங்களதுபோராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டனர். இதனால் மாணவர்கள் போராட்டம் வலுவிழந்தது.
இந் நிலையில் மருத்துவ மாணவர் கூட்டமைப்பின் தலைவர் அமுத கலைஞன் தலைமையில்மாணவர் சங்க பிரதிநிதிகள் இன்று காலை மருத்துவக் கல்வி இயக்குனர் ரவீந்திரநாத்தைச் சந்தித்துமனு கொடுத்தனர்.
அதில், தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி தருவது தொடர்பாக சில புதியபரிந்துரைகளைக் கூறியிருந்தனர். மேலும் தங்கள் மீதான சஸ்பென்சன் உத்தரவு வாபஸ்பெறப்பட்டால் வகுப்புகளுக்குத் திரும்பத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
இந்த மனுவை வாங்கிக் கொண்ட ரவீந்திரநாத், அமைச்சர் செம்மலையிடம் இதைக்கொடுப்பதாகவும் அவர் நல்ல முடிவை எடுப்பார் என்றும் கூறினார். செய்தியாளர்களிடம்ரவீந்திரநாத் பேசுகையில்,
மாணவர்களின் மனுவைப் பார்க்கையில், அவர்களது போராட்டம் விரைவில் முடிவுக்கு வந்து விடும்என்றே தோன்றுகிறது.எல்லாம் சுபமாக முடியும் என்று நம்புகிறேன். மாணவர்கள் ஆரம்பித்தபோராட்டம் மாணவர்களால் தான் முடிவுக்கு வர வேண்டும் என்றார்.
அமுத கலைஞன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தனியார் மருத்துவக் கல்லூரிகள் தொடர்பாகசில புதிய யோசனைகளைத் தெரிவித்துள்ளோம். அதை அரசு ஏற்றுக் கொள்ளும் என்றுநம்புகிறோம் என்றார்.
இன்று மாலை அமைச்சர் செம்மலையை மாணவர்கள் சந்திக்கிறார்கள். அப்போது ஸ்டிரைக்கைவிலக்கிக் கொள்வது தொடர்பாக அவரிடம் முறைப்படி அறிவிப்பார்கள் என்று தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications