தா.கி. கொலையில் மூ.மு.க. பிரமுகருக்கு தொடர்பு?
மதுரை:
தா.கிருட்டிணன் கொலைக்கும் அழகிரிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. திமுகவில் நிலவும் கோஷ்டி மோதலை பயன்படுத்திக்கொண்டு தா.கிருஷ்ணனின் எதிரிகள்தான் இந்த கொலையைச் செய்திருக்க வேண்டும் என்று அழகிரியின் ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.
மதுரை திமுகவில் உள்ள பூசல்கள் அனைவரும் அறிந்ததே. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அழகிரியின் பெயரைக் கெடுக்கவும்,திமுகவை சிக்கலில் மாட்டிவிடவும் இந்தக் கொலை நடந்துள்ளது.
தா.கியின் சொந்த எதிரிகள்தான் ஆளும் கட்சியினரின் தூண்டுதலால் இந்தக் கொலையைச் செய்துள்ளனர் என அவர்கள்கூறுகின்றனர்.
கொலையாளிகள் யாராக இருக்கக் கூடும் என்பதையும் மறைமுகமாக அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
கடந்த 1997ம் ஆண்டு வக்கீல் தியாகராஜன் என்பவர் படுகொலை செய்யப்பட்டர். அந்த சமயத்தில் பலர் கைது செய்யப்பட்டனர்.அவர்களில் முக்கியமானவர் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன்.
இவரது பெயரையும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்குமாறு, அப்போது தா.கிருட்டிணன் போலீஸாரை வலியுறுத்தினார்.இதையடுத்து ராமச்சந்திரனையும் போலீஸார் கைது செய்தனர்.
இவர்கள் மீது சிவகங்கை நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. இதில் அனைவருக்கும் ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்டராமச்சந்திரனின் ஆதரவாளர்கள்தான் பழி வாங்கும் நடவடிக்கையாக தா.கிருட்டிணனை கொலை செய்திருக்க வேண்டும் என்றுஅழகிரி ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.
கொலையாளிகளைப் பிடிக்க இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் படைகளின்விசாரணையில் கொலையாளிகள் கூலிக்கு அமர்த்தப்பட்டவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. அவர்கள் இப்போதுதிருநெல்வேலியில் ஒரு அரசியல் கட்சிப் பிரமுகரின் வீட்டில் பதுங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து ஒரு தனிப் படை நெல்லை விரைந்துள்ளது.
ஜாமீன் கோரி அழகிரி மனு:
ஜாமீன் கோரி மு.க.அழகிரி மதுரை நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை வருகிற 28ம் தேதிநடக்கிறது.
முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணன் படுகொலை தொடர்பாக அழகிரி கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில்அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறையில் ஏ கிளாஸ் கொடுக்க நீதிபதி வனிதா உத்தரவிட்டுள்ளார்.
இந் நிலையில் அழகிரி சார்பில், ஜாமீன் கோரி மதுரை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விரைவு நீதிமன்ற நீதிபதிஉதயன் முன் வரும் 28ம் தேதி இந்த மனு விசாரணைக்கு வருகிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications