திமுகவை பிளக்க ஜெ. சதி: ஸ்டாலின் புகார்
மதுரை:
திமுகவை பிளக்க வேண்டும் என்பதற்காகவே அழகிரியை அவசர அவசரமாக அரசு கைது செய்துள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரையில் இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தா.கிருட்டிணன் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை விட்டுவிட்டு அழகிரியை அவசர அவசரமாகஜெயலலிதா அரசு கைது செய்துள்ளது. இதனால் குற்றவாளிகளைப் பிடிக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை என்பதுதெளிவாகிவிட்டது. திமுகவை பிளக்க வேண்டும் என்பதில் தான் ஆர்வம் காட்டுகிறார்கள் என்று கூறியுள்ளார்.
முன்னதாக அமெரிக்காவில் இருந்து நேற்றிரவு விமானம் மூலம் சென்னை வந்த அவர் விமான நிலையத்தில்செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தது முதல் இதுவரை திமுகவை பழிவாங்கும் நோக்கிலேயே நடவடிக்கைகள்மேற்கொண்டு வருகிறார். அதேபோலத்தான் தா.கி. விஷயத்திலும், உண்மையான குற்றவாளியை விட்டு விட்டுதிசை திருப்பும் நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளனர்.
இது பழிவாங்கும் நடவடிக்கை. உட்கட்சித் தேர்தல் விஷயத்தில் தலைவர் கருணாநிதி என்ன முடிவெடுத்தாலும்அதை ஏற்பதாக நானம் தா.கிருட்டிணனும் தெரிவித்திருந்தோம். இதனால், தேர்தல் பிரச்சனையில் இந்தக்கொலையே நடக்கவில்லை. ஆனால், வேண்டுமென்றே ஜெயலலிதா இந்த பிரச்சனையை திசை திருப்ப காவல்துறையை ஏவி விட்டுள்ளார். இந்த பிரச்சினையை நீதிமன்றம் மூலம் சந்திப்போம்.
திமுகவில் குழப்பம் ஏற்படுத்தும் ஜெயலலிதாவின் முயற்சிகள் பலிக்காது என்றார்.
சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்: இளங்கோவன்
இதற்கிடையே சேலத்தில் நிருபர்களிடம் பேசிய காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன், தா.கிருட்டிணன்படுகொலை தொடர்பாக மு.க.அழகிரி அவசர அவசரமாகக் கைது செய்யப்பட்டிருப்பது சந்தேகத்தைத் தருகிறது.
தமிழகத்தில் ஜெயலலிதா அரசு பதவிக்கு வந்த பிறகு பல அரசியல் கொலைகள் நடந்துள்ளன. அப்போதெல்லாம்அவசரம் காட்டாமல், அக்கறை காட்டாமல் இருந்து விட்டு இப்போது தா.கி விஷயத்தில் இந்த அரசு காட்டும்அவசரமும், வேகமும் சந்தேகத்தைக் கிளப்புகிறது.
தா.கி படுகொலை குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். எனவே சி.பி.ஐ விசாரணைக்குஉத்தரவிட வேண்டும் என்றார் அவர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications