சனிப்பெயர்ச்சி: திருநள்ளாறில் சிறப்பு பூஜை

Subscribe to Oneindia Tamil

காரைக்கால்:

நவ கிரஹங்களில் முதன்மையானவரான சனி பகவான் இன்று ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்குஇடம் பெயர்ந்தார். இதையொட்டி திருநள்ளாறில் உள்ள சனீஸ்வர பகவான் திருக்கோவிலில்சிறப்புப் பூஜைகள் நடந்தன.

இதில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்று தோஷ நிவர்த்தி செய்தனர்.

இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சனி பகவான் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடம்பெயர்கிறார். இன்று காலை சரியாக 8.27 மணிக்கு சனீஸ்வரர் மிதுன ராசிக்கு பிரவேசித்தார்.

இதையொட்டி நாடு முழுவதும் உள்ள சிவாலயங்கள், நவ கிரஹத் தலங்களில் சிறப்புப் பூஜைகள்நடந்தன. சனீஸ்வரரின் திருத்தலமான திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலிலும் சிறப்பு பூஜைகள்நடந்தன.

இதில் பங்கேற்க நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று திருநள்ளாற்றில்திரண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்று சனி பகவானின் அருளைப் பெற்றனர்.

கோவில் வளாகத்தில் உள்ள நள தீர்த்தத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.

சனாஸ்வரருக்கு கருப்பு ஆடைகளை அணிவித்தும், எள் தானியத்தை நைவேத்யம் செய்தும்வழிபட்டனர்.

புதுவை ஆளுனர் மயக்கம்:

புதுவை துணை நிலை ஆளுனர் மல்கானியும் சனீஸ்வரர் ஆலயத்துக்கு வந்து பூஜைகள் செய்கார்.அப்போது கூட்ட நெரிசல் காரணமாக அவருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது.

உடனடியாக அவர் காரைக்காலில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+