தா.கியின் உடல் தகனம்: ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி
மானாமதுரை:
மதுரையில் படுகொலை செய்யப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணனின் உடல் இன்று அவரது சொந்தஊரில் தகனம் செய்யப்பட்டது.
அமெரிக்காவில் இருந்த த.கிருட்டிணனின் மகன் தொல்காப்பியன் இன்று காலை வந்து சேர்ந்ததையடுத்து இந்தஇறுதிச் சடங்கு நடந்தது.
இதில் ஏராளமான திமுகவினரும் பொது மக்களும் பங்கேற்றனர். அவர் உடல் கொண்டு செல்லப்பட்டவழியெங்கும் ஏராளமான பொது மக்கள் திரண்டிருந்தனர்.
மதுரையில் வாக்கிங் சென்றபோது, சிலரால் தா.கிருட்டிணன் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைதொடர்பாக மு.க.அழகிரி, முன்னாள் திமுக எம்.எல்.ஏ. சிவராமன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் தா.கிருட்டிணனின் உடல் இன்று அவரது சொந்த ஊரான, சிவகங்கை மாவட்டம் மானாமதுரைஅருகே உள்ள கொம்புக்கரனேந்தல் கிராமத்தில் உள்ள இடுகாட்டில் நடந்தது. இந்த இறுதியஞ்சலியில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்றிருந்த மு.க.ஸ்டாலின் நேற்றிரவு சென்னை திரும்பினார்.
உடனே மதுரை புறப்பட்ட அவர் இன்று காலை கொம்புக்கரநேந்தலுக்கு வந்து கிருட்டிணன் உடலுக்கு அஞ்சலிசெலுத்தினார். அப்போது அவர் கதறி அழுதார்.
அவரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், துரைமுருகன்,பொன்முடி, காங்கிரஸ் தலைவர் சோ.பாலகிருஷ்ணன், மக்கள் தமிழ் தேசம் தலைவர் கண்ணப்பன்,கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன்,சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
இதன் பின்னர் அவரது உடல் ஊர்வலமாக் கொண்டு செல்லப்பட்டு கொம்புக்கரேனந்தலில் உள்ளஅவருக்குச் சொந்தமான தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது..
கதறி அழுத துரைமுருகன், டி.ஆர்.பாலு:
முன்னதாக த.கிருட்டிணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த திமுக தலைவர்களில் ஒருவரான துரைமுருகன்சோகம் தாளாமல் தலையில் அடித்துக் கொண்டு அழுதார்.
இதேபோல, மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவும், தா.கியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும்போது கதறி அழுதார்.
தா.கி. உடல் தகனத்தையொட்டி சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் போலீஸார்உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications