அழகிரி கைது: வாஜ்பாய்க்கு கருணாநிதி கடிதம்
சென்னை:
திமுகவை உடைக்க ஜெயலலிதா சதி செய்வதாக பிரதமர் வாஜ்பாய்க்கு, திக தலைவர் கருணாநதிகடிதம் எழுதியுள்ளார்.
முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் மு.க.அழகிரி கைதுசெய்யப்பட்டுள்ளது தொடர்பாக பிரதமர் வாஜ்பாய்க்கு கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
அதில், அழகிரி பிரபலமான திமுக தொண்டர். தா.கிருட்டிணன் கொலை வழக்கில், எந்தவிதவிசாரணையும் இன்றி, ஆளுங்கட்சியினரின் நெருக்குதல் காரணமாக போலீஸார் கைது செய்துசிறையில் அடைத்துள்ளனர்.
தமிழக ஆட்சியாளர்கள் தங்களது அதிகாரத்தை எந்த அளவுக்கு தவறுதலாக பயன்படுத்துகிறார்கள்என்பதற்கு இது சரியான உதாரணம்.
தா.கிருட்டிணன் கொலை வழக்கில் உண்யைமான குற்றவாளிகளைப் பிடிப்பதற்குப் பதில்எதிர்க்கட்சியினரைப் பழி வாங்கும் முயற்சியில் அதிமுக அரசு ஈடுபட்டுள்ளது.
கொலை நடந்த 24 மணி நேரத்துக்குள் ஒரு ஆதாரம் கூட இல்லாத நிலையில் அழகிரியைஅவசரப்பட்ட கைது செய்துள்ளனர்.
தென் மாவட்டங்களில் தா.கிருட்டிணனும், அழகிரியும் சேர்ந்தே திமுக கட்சிப் பணிகளை கவனித்துவந்தனர். பல்வேறு போராட்டங்கள், நிகழ்ச்சிகளை இருவரும் இணைந்தே தான் நடத்தினர்.
சில வாரங்களுக்கு முன்பு கூட திமுக சார்பில் நடந்த போராட்டத்தில் இருவரும் கலந்துகொண்டனர்.கட்சி என்று இருந்தால் கோஷ்டிகள், பூசல்கள் இருக்கத்தான் செய்யும்.
அதற்காக ஒரு மூத்த தலைவரைக் கொலை செய்யும் அளவுக்கு சக கட்சிக்காரர் செல்வார் என்று கூறமுடியாது. கடந்த 2001ம்ஆண்டு ஜூன் மாதம் நான் கைது செய்யப்பட்டேன்.
அதற்குப் பிறகு திமுகவை பழிவாங்கும் நோக்கிலும், பிளக்கும் நோக்கிலும் ஜெயலலிதா அரசுசெயல்பட்டு வருகிறது. சமீபத்தில் எனது இளைய மகன் ஸ்டாலின் தேவையே இல்லாமல் கைதுசெய்யப்பட்டார்.
இதுமட்டுமல்லாது, வைகோ, நக்கீரன் கோபால் என முறைகேடான கைதுகளின் பட்டியல் நீளுகிறது.
இவ்வாறு தனது கடிதத்தில் கருணாநிதி கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications