மதிமுகவில் இன்னொருவருக்கு பதவி: வாஜ்பாய் தயார்- வைகோ ஏற்க மறுப்பு
டெல்லி &சென்னை:
செஞ்சி ராமச்சந்திரன் ராஜினாமவைத் தொடர்ந்து மதிமுகவைச் சேர்ந்த இன்னொருவருக்கு அமைச்சர் பதவித் தரத்தயார் என பிரதமர் வாஜ்பாய் அறிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரவையில் நேற்றிரவு மாற்றம் செய்யப்பட்டது. சில அமைச்சர்களின் இலாகாக்கள்மாற்றப்பட்டுள்ளன. சில ஆர்.எஸ்.எஸ்காரர்கள் துணை அமைச்சர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். மத்திய அரசுடன்ஏற்பட்ட மோதலால் கடைசி நேரத்தில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அமைச்சர் பதவியைநிராகரித்துவிட்டார்.
ஆனால், அவருடன் பேச்சு நடத்தி விரைவில் அவரை மத்திய அமைச்சராக்குவோம் என வாஜ்பாய்அறிவித்துள்ளார். மேலும் மதிமுகவைச் சேர்ந்த செஞ்சி ராமச்சந்திரன் ஊழல் குற்றச்சாட்டால் பதவி விலகியதால்அக் கட்சியைச் சேர்ந்த வேறு ஒருவருக்குப் பதவி தரவும் தயார் என்று வாஜ்பாய் அறிவித்துள்ளார்.
ஆனால், ராமச்சந்திரன் தவிர இப்போது வைகோவும், பழனி எம்.பியான கிருஷ்ணனும் மட்டுமே மதிமுகஎம்.பிக்களாக உள்ளனர். இன்னொரு எம்.பியான கண்ணப்பன் அமைச்சராக உள்ளார்.
இதனால் கிருஷ்ணனுக்குத் தான் மத்திய அமைச்சராகும் வாய்ப்பு உள்ளது. ஆனால், இதில் அவசரம் காட்டவேண்டாம் என வைகோ கூறிவிட்டதாகத் தெரிகிறது.
ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து செஞ்சி ராமச்சந்திரனை வெளியே கொண்டு வருவது தான் கட்சியின் முதல்கடமையாக இருக்க வேண்டும் என தன்னைச் சந்தித்த மதிமுகவினரிடம் வைகோ கூறியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகளில் இருந்து ராமச்சந்திரன் வெளியே வந்தால் தான் மதிமுகவுக்கு ஏற்பட்டுள்ள கெட்டபெயரைத் துடைக்க முடியும். இல்லாவிட்டால் பொது வாழ்வில் தூய்மை என்பதை கொள்கையாகக் கொண்டகட்சியின் எதிர்காலமே கடுமையாக பாதிக்கப்படும் என வைகோ நினைக்கிறார்.
இதனால் இப்போதைக்கு வேறு யாரையும் மத்தியில் அமைச்சராக்க வைகோ தயாராக இல்லை என்றுகூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications