மீண்டும் தென் சென்னை அதிமுக செயலாளரானார் ஆதி ராஜாராம்
சென்னை:
அடாவடிக்குப் பெயர் போன ஆதி ராஜாராமை மீண்டும் தென் சென்னை மாவட்டச் செயலாளராக முதல்வர்ஜெயலலிதா நியமித்துள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் வட சென்னை மாவட்டத்தில் ரவுடித்தனக்குக்குப் பெயர் போனவராக விளங்கியமதுசூதனனை அமைச்சராக்கினார் ஜெயலலிதா. அப்போது மதுசூதனனின் வலது கரமாக இருந்தவர் ஆதிராஜாராம். திமுக ஆட்சியில் ஜெயலலிதா செல்லும் இடங்களில் எல்லாம் அவருக்குப் பாதுகாப்பு தருவதுமதுசூதனன்- ஆதி ராஜாராமின் வேலையாக இருந்தது.
பின்னர் ஆட்சிக்கு வந்தவுடன் மதுசூதனனை அமைச்சராக்கினார் ஜெயலலிதா. கட்சியில் ஆதி ராஜாராமும் வெகுவேகமாக வளர்ந்தார். தென் சென்னை மாவட்ட அதிமுக செயலாளரானார்.
அந்த நிலையில் தான் முதல்வர் ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு உள்ளிட்ட சில விஷயங்களில் வழக்குகளைப்போட்டார் வக்கீல் விஜயன். இதையடுத்து வக்கீல் விஜயன் மீதான கொலை வெறித் தாக்குதல் நடந்தது. அவரதுவீடு சூறையாடப்பட்டது. இதில் முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார் ஆதி ராஜாராம்.
ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்த ஆதி ராஜாராம், பின்னர் ராஜ்யசபா தேர்தலுக்கும்நிறுத்தப்பட்டு, கடைசி நேரத்தில் வாபஸ் பெறப்பட்டார். சமீப காலமாக போயஸ் தோட்டம் இவரைகண்டுகொள்ளவில்லை.
ஆனாலும் இவரது சம்பாத்தியத்தையும் தடுக்கவில்லை. இதனால் தொடர்ந்து தீவிர ஜெயலலிதா விசுவாசியாகவேசெயல்பட்டு வருகிறார்.
சமீப காலமாக பெரிய அளவில் கட்சிப் பதவி எதுவும் கொடுக்கப்படாமல் இருந்த ஆதி ராஜாராம் தற்போதுமீண்டும் தென் சென்னை மாவட்ட அதிமுக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை ஜெயலலிதா பிறப்பித்துள்ளார். இதுவரை இப்பொறுப்பில் இருந்த ராஜேந்திர பாபுநீக்கப்பட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications