துபாய் புறப்பட்டது நடிகை, நடிகர் குழு
சென்னை:
தாய் கிண்ணத்தில் பிச்சை எடுக்க மகன் கும்பகோணத்தில் கோ தானம் செய்தானாம்
தாய் மண்ணில் எங்கள் மக்கள் ஒரு வேளை சோற்றுக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் நட்சத்திரக் கலைவிழா என்ற பெயரில் தமிழர்களை சுரண்ட நாடு கடந்து வருகிறது இந்தக் கும்பல். அவர்களை ஆதரிக்காதீர்கள்.அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிக்குப் போகாதீர்கள்.
இந்தக் குரல் எழுந்துள்ளது லண்டனில்... குரல் தந்துள்ள இலங்கைத் தமிழர்கள்.
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நல நிதிக்காக லண்டன் மற்றும் துபாய் நகரங்களில் தமிழகதிரையுலக நட்சத்திரங்கள் நடத்தவுள்ள கலை நிகழ்ச்சிக்குத் தான் இந்த எதிர்ப்பு.
இந்த கலை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நடிகர், நடிகையர் இன்று ( 26ம் தேதி) சென்னையிலிருந்துதுபாய்க்கு பயணமாயினர். அங்கு 29ம் தேதி கலை நிகழ்ச்சி நடத்திவிட்டு லண்டன் செல்கின்றனர்.லண்டனில் 31ம் தேதி கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
இதில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொள்கின்றனர்.
ஆனால், லண்டனுக்கு வர வேண்டாம்.. வந்தாலும் உங்கள் நிகழ்ச்சியைப் பார்க்க நாஙகள் வரமாட்டோம் என இங்கிலாந்தில் பெருவாரியாக வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் குரல்எழுப்பியுள்ளனர்.
தமிழக சினிமாகாரர்களுக்கு பாக்கெட் வற்றும்போதெல்லாம் வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் நினைவுக்குவந்துவிடுவது வழக்கம். முன்பு நடிகர் சங்கத்துக்கு நிதி திரட்ட சிங்கப்பூர், மலேசியாவுக்குப் போய் வந்தார்கள்.திரட்டப்பட்ட பல கோடிகளுக்கு இதுவரை கணக்கு தரவில்லை விஜய்காந்த்.
இந் நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு நிதி திரட்ட வளைகுடா நாடுகள் மற்றும் லண்டனில் கலை நிகழ்ச்சிநடத்தத் திட்டமிட்டுள்ளனர். இதில் முன்னணி நடிக, நடிகைகள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் எனஉத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உத்தரவிட்டிருப்பது தயாரிப்பாளர்கள் என்பதால் அதைப் புறக்கணிக்க முடியாத நிலையில் நடிகர், நடிகையர்உள்ளனர். இந்த கலை நிகழ்ச்சிகளில் நடனமாட உள்ள நடிக, நடிகையர்கள் கடந்த 20 நாட்களாக மாஸ்டர்கலாவின் கண்காணிப்பில் தீவிர ரிகர்சலில் ஈடுபட்டனர்.
இந் நிலையில் தான் இந்த நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்குமாறு லண்டன் வாழ் தமிழர்களிடையே உரத்த குரல்எழுந்துள்ளது.
இனப் பிரச்சனையால் அகதிகளாய் நாடு விட்டு நாடு வந்து உழைப்பால் வாழ்வதற்கு பல வழிகளைக்கண்டுபிடித்து பணம் சேர்க்கிறோம். எங்களிடம் பணம் சுரண்டுவதற்கென்றே ஒரு கூட்டம் திரிகிறது. இப்போதுஇந்த சுரண்டல் கூட்டத்தில் தமிழக சினிமா உலகமும் சேர்ந்து கொண்டுள்ளது என்கின்றனர் இலங்கைத் தமிழர்கள்.
கோடை காலம் வந்துவிட்டாலே கலை நிகழ்ச்சிகள் என்ற பெயரில் களியாட்டங்கள் நடத்தி உழைப்பவர்களைசுரண்டும் இந்தக் கும்பல்கள் இப்போது தமிழக சினிமா கலைஞர்களையும் தங்கள் சுரண்டல்களுக்குப் பயன்படுத்தஆரம்பித்துள்ளார்கள் என்று கூறும் இவர்கள் இந்த நிகழ்ச்சியைப் புறக்கணிக்குமாறு தங்களது சங்கங்கள் மூலம்அவர்கள் தீவிர பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரசாந்த் நைட், ராதிகா தலைமையிலான நிகழ்ச்சி என லண்டனில் நிகழ்ச்சிகள் நடத்தி கோடிக்கணத்தில் நம்பணத்தை சுருட்டியுள்ள இவர்கள் இப்போது மெகா ஸ்டார் நைட்-2003 என்ற பெயரில் நம்மை சுரண்டவருகிறார்கள். அவர்களைப் புறக்கணிப்பீர் என்று அழைப்பு விடுத்துள்ளன பல்வேறு தமிழர் அமைப்புகள்.
வானம் பொய்த்ததால் எலி திண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்ட தஞ்சை விவசாயிகளுக்கோ, காவிரி பிரச்சனையில்பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கோ நன்மை செய்ய இவர்கள் பணம் திரட்ட இங்கே வரவில்லை.
தமிழகத்தில் சினிமா மூலம் பணம் குவித்து வைத்திருக்கிற தமிழத் தயாரிப்பாளர்களின் பாக்கெட்டுகளை மேலும்நிரப்பத்தான் இங்கு வந்து கலை நிகழ்ச்சி நடத்துகிறார்கள். இதனால் இந்த நிகழ்ச்சிகளை புறக்கணிப்போம்என்கின்றன இலங்கைத் தமிழர் அமைப்புகள்.
இலங்கைத் தமிழர்களிடம் தான் இந்த எதிர்ப்பு உள்ளது. ஆனால், மற்றவர்கள் இந்த நிகழ்ச்சியை ஆதரிக்கின்றனர்.இதனால் டிக்கெட்டுகள் படு வேகமாக விற்பதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகின்றனர்.
இந்த எதிர்ப்புகளுக்கு இடையே நடிகை, நடிகையர் சுமார் 40 பேர் இன்று முதல் அணி அணியாகதுபாய் புறப்படுகின்றனர். முதல் குழு இன்று காலை கிளம்பிச் சென்றது. இதில் விக்ரம், சத்யராஜ்,நெப்போலியன், அப்பாஸ், கிரண், ரீமா சென், ரதி, வடிவேலு, கருணாஸ், விந்தியா, மும்தாஜ்ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
கலா தனது நடனக் கலைஞர்கள் சுமார் 30 பேருடன் நேற்றே துபாய் போய்ச் சேர்ந்துவிட்டார்.நாளையும் நாளை மறுதினமும் மேலும் இரு குழுக்கள் செல்கின்றன. இதில் லைலா, மீரா ஜாஸ்மீன்,தேவயானி, ரம்பா, ஜோதிகா. சிம்ரன், விஜய்காந்த் உள்ளிட்டவர்கள் செல்கின்றனர்.
கமல்ஹாசனும் இந் நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. ரஜினி கலந்து கொள்ளவாய்ப்பில்லை என்று தெரிகிறது.
துபாயில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு லண்டன் செல்லும் இந்தக் கலைஞர்களுக்கு கறுப்புக் கொடிகாட்டவும், இவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தவும் இலங்கைத் தமிழர்கள் தயாராகிவருகின்றனர்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications