மலேசியா: இந்திய என்ஜினியர் நாளை விடுதலை
கோலாலம்பூர்:
வந்தனா சக்சேனா
விசா காலம் முடிந்த பின்னரும் மலேசியாவில் ஒரு வார காலம் தொடர்ந்து தங்கியதால் தான் பெங்களூரைச் சேர்ந்தசாப்ட்வேர் என்ஜினியர் கைது செய்யப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது. அவர் நாளை விடுதலை செய்யப்படுகிறார்.
பெங்களூர் ஐ.பி.எம். கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நரேந்திர பாபு பணி தொடர்பாக மலேசியாஅனுப்பப்பட்டார். அங்கிருந்து கடந்த வெள்ளிக்கிழமை நாடு திரும்ப விமான நிலையம் வந்தபோது அங்குவைத்தே கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை மலேசிய போலீசார் விளக்கவில்லை. இந் நிலையில் விசா காலம் முடிந்தபின்னரும் மலேசியாவில் ஒரு வாரம் தங்கியதால் தான் அவர் கைது செய்யப்பட்டார் என்று தெரிய வருகிறது.
இவரது விசா கடந்த 16ம் தேதியுடன் முடிவடைந்தது. ஆனால், கடந்த 13ம் தேதியே தனது விசா காலத்தை மேலும்இரு வாரங்களுக்கு நீட்டிக்குமாறு இவர் கடிதம் அனுப்பினார். ஆனால், அந்தக் கடிதத்துக்கு பதிலேதும் வரவில்லை.இதனால் தனது விசா நீட்டிக்கப்பட்டுவிட்டதாகக் கருதிய இவர் தொடர்ந்து தங்கியுள்ளார்.
இதையடுத்து இவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கடந்த முறை இந்திய சாப்ட்வேர் நிபுணர்களை மலேசிய போலீசார் கட்டிப்போட்டு அசிங்கப்படுத்திய சம்பவத்தால்இரு நாட்டு உறவுகளும் சீர் குலையும் நிலை ஏற்பட்டது. இதனால் இந்த முறை மலேசியா ஜாக்கிரதையாக நடந்துகொண்டுள்ளது.
கூடிய விரைவில் நரேந்திர பாபுவை விடுவிப்பதாக கோலாலம்பூரில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு மலேசியவெளியுறவுத்துறை தானாகவே தகவல் தந்துள்ளது. மேலும் நரேந்திர பாபுவை கண்ணியமாக நடத்துவதாகவும்உறுதி மொழி தந்துள்ளது. இப்போது அவர் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்திலேயே கைதுசெய்யப்பட்டு வைக்கப்பட்டுளளார்.
ஒரு வார காலம் மட்டுமே கூடுதலாகத் தங்கியதால் அவருக்கு 100 ரிங்கிட் (ரூ. 1,200) அபராதம் விதித்துவிட்டுஅவரை விடுவித்துவிட மலேசியா முன் வந்துள்ளது. இரு வார காலத்துக்கும் மேல் தங்கியிருந்தால் நீதிமன்றம்மூலம் தான் அவர் விடுதலை பெற முடியும்.
தன்னை இன்றே விடுவிக்குமாறு நரேந்திர குமார் விடுத்த கோரிக்கையை மலேசியா நிராகரித்துவிட்டது. நாளைவிமானம் ஏறும் வரை அவர் காவலில் தான் இருப்பார், அவரை குடியேற்றத்துறை அதிகாரிகளே விமானத்தில்ஏற்றி விடுவார்கள் என்றும் கூறியுள்ளது.
இவரிடம் மலேசியன் ஏர்லைன்ஸ் டிக்கெட் தான் உள்ளது. இதனால் நாளை இந்தியா செல்லும் எதாவது ஒருமலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் தான் இவரை ஏற்றி விடுவோம். பெங்களூருக்கு மலேசியன் ஏர்லைன்ஸ்விமானம் ஏதும் இல்லை. அவர் பெங்களூர் செல்லும் விமானத்தில் டிக்கெட் எடுத்தால் அதில் ஏற்றிவிடவும் தயார்என மலேசிய வெளியுறவுத்துறை கூறியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications