ஈராக்குக்கு இந்திய அமைதி படை: அமெரிக்கா நெருக்கடி
டெல்லி:
ஈராக்கில் அமைதி காப்புப் படைக்கு இந்திய ராணுவத்தையும் அனுப்புமாறு அமெரிக்கா நெருக்கடி தந்துவருகிறது. இது தொடர்பாக இன்று பிரதமர் வாஜ்பாய் ராணுவ அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
ஆனால், இதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து பிரதமர் அலுவலகம் எதுவும் சொல்ல மறுத்துவிட்டது. இதனால்அமெரிக்க நெருக்குதலுக்குப் பணிந்து இந்தியப் படைகள் அனுப்பப்படலாம் என்று தெரிகிறது.
உலகின் ஒட்டு மொத்த எதிர்ப்பையும் மீறி ஈராக்கை அமெரிக்கா-பிரிட்டிஷ் படைகள் தாக்கி அந் நாட்டைகைப்பற்றியுள்ளன. இப்போது அங்கு அமைதியை நிலை நாட்ட கூடுதல் படைகள் தேவைப்படுகின்றன.
இதில் பிற நாட்டுப் படைகளையும் ஈடுபடுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதற்காக படைகளை அனுப்புமாறுஜோர்டன், பாகிஸ்தான், இந்தியா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளை நெருக்கி வருகிறது.
இதையடுத்து ராணுவத் தளபதி, வெளியுறவுத்துறைச் செயலாளர், பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் பிரதமர்வாஜ்பாய் இன்று நெடுநேரம் ஆலோசனை நடத்தினார்.
இதில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால், இப்போது ஜோர்டானில் இருந்து செயல்பட்டுவரும் ஈராக்குக்கான இந்தியத் தூதர் தியாகியை மீண்டும் பாக்தாதுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாகமட்டும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
படைகளை அனுப்புவது குறித்து எந்தக் தகவலும் வெளியிடவில்லை. இது தொடர்பாக மேலும் ஆலோசனைநடத்த வாஜ்பாய் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications