இட ஒதுக்கீட்டை சரியாக கடைப்பிடிப்பது திமுகதான்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக உட்கட்சித் தேர்தலல் தான் இட ஒதுக்கீடு முறை மிக சரியாக கடைப்பிடிக்கப்பட்டுள்ளதாக திமுகதலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

12-வது திமுக இடைத் தேர்தல்களில் மகளிர் மற்றும் ஆதி திராவிடர், பழங்குடியினருக்கு சரியானமுறையில் பிரதிநதித்துவம் தரப்பட்டுள்ளது பெருமிதம் தருகிறது.

திமுக போன்ற ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள, ஜனநாயக வழியில் நடத்தப்படும்அமைப்புகளில் மகளிருக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் உரிய ஒதுக்கீடு கண்டிப்பாக இருக்கும்.

பெரம்பலூர் மாவட்ட செயலாளராக ராஜாவும் (மத்திய அமைச்சராக இருக்கிறார்), நாகை மாவட்டசெயலாளராக விஜயனும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இருவரும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்தவர்கள்.

அதேபோல, மகளிருக்கும் முறையான இட ஒதுக்கீடு தரப்பட்டுள்ளது. ஜூன் 2ம் தேதி திமுகபொதுக்குழு கூடும்போது, புதிய நிர்வாகிகளை சந்திக்கவுள்ளேன்.

ஒரு தாய்க்கும், தந்தைக்கும் எல்லாப் பிள்ளைகளும் ஒன்றுதான். அதுபோலவே, தேர்தலில்வென்றவர்களும், வெற்றி வாய்ப்பை இழந்தவர்களும் எனக்கு ஒன்றுதான்.

வென்றவர்களுக்கு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+