தா.கியை கொன்றவர்கள் அடையாளம் தெரிந்தது: 3 பேர் கைது
மதுரை:
முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கு தொடர்பாக, கொலையாளிகளில் 3 பேர்கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் ஒருவர் விரைவில் பிடிபடுவார் என்றும் கூறப்படுகிறது.
இந்தக் கொலையில் அழகிரிக்கு நேரடி தொடர்பு இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.
மதுரை கே.கே.நகரில் உள்ள தனது வீட்டின் அருகே தா.கிருட்டிணன் படுகொலை செய்யப்பட்டார்.படுகொலை தொடர்பாக போலீஸார் 6 தனிப் படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தக்கொலை தொடர்பாக அழகிரி உள்ளிட்ட 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த எஸ்.ஆர்.கோபி, மன்னன், ஜெயராமன், ராஜ் உள்ளிட்ட 5பேர் தான் போலீஸாரின் தீவிர விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து சிலபரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளன.
இவர்கள் அளித்த தகவலின்பேரில் தற்போது 3 கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,இன்னொருவர் பதுங்கியிருக்கும் இடம் தெரிய வந்துள்ளதாகவும், அடுத்த இரு நாட்களில் அவரும்பிடிபடுவார் என்றும் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று, தா.கி வீட்டை விட்டு வெளியே வந்த சிறிது நேரத்தில் கொலையாளிகளில் 3 பேர்அவரை நெருங்கியுள்ளனர். இன்னொருவர் ஒருவர் தூரத்திலேயே கையில் செல்போனுடன்நின்றுள்ளார். தா.கியை நெருங்கிய 3 பேரில் 2 பேர் அவர் தப்பி விடாதபடி பிடித்துக் கொள்ளஇன்னொருவர் மட்டும் அரிவாளால் தா.கியை சரமாரியாக வெட்டியுள்ளார்.
அவரது கழுத்தை அறுத்துள்ளனர். பின்னர் வயிற்றில் கத்தியால் குத்தி திருகியுள்ளனர். இவைபோஸ்ட் மார்ட்டத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளன.
வயிற்றில் கத்தியைக் குத்தி திருகிக் கொலை செய்வது வில்லாபுரம் ரவுடிகளின் செயல் என்பதால்அப் பகுதியைச் சேர்ந்த கூலிப் படையினரை போலீசார் குறி வைத்தனர். மேலும் அப் பகுதியைச்சேர்ந்த அழகிரி ஆதரவாளர்களை தீவிர விசாரணைக்கு உட்படுத்தினர். இதில் தான் இப்போது 3பேர் சிக்கியுள்ளனர்.
கொலை செய்ய ரூ. 10 லட்சம்?:
கொலையைச் செய்தவர்கள் கூலிகள் தான் என்றும் இவர்களுக்கு ரூ. 10 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் போலீஸ்விசாரணையில் தெரியவந்துள்ளது.
தா.கி. ரத்தக் காயங்களுடன் கீழே விழுந்து பிணமானவுடன், செல்போனுடன் இருந்தவர் அந்தத்தகவலை எங்கோ கூறியுள்ளார். பின்னர் 4 பேரும் 2 மோட்டார் சைக்கிள்களில் ஏறித் தப்பியுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் கொலையாளிகள் தப்பியபோது அவர்களைப் பின் தொடர்ந்து வந்த டாடா சுமோ காரில்தா.கியைக் கொல்ல உத்தரவிட்டவர்கள் பணத்துடன் வந்ததும், ஒரு இடத்தில் வைத்து பணம் கைமாறியதும்உறுதியாகியுள்ளது. கைதான அழகிரி ஆதரவாளர்கள் மூலம் இந்தத தகவலகளை போலீசார்திரட்டியுள்ளனர்.
மேலும் தற்போது தலைமறைவாகியுள்ள ஒருவர் தென் மாவட்ட முக்கிய பிரமுகர் ஒருவரதுபாதுகாப்பில்தான் இருப்பதாகவும், சரியான ஆதாரம் கிடைத்தால் அந்த பிரமுகரும் சேர்த்தே கைதுசெய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications
