வைகோவுடன் செஞ்சி ராமச்சந்திரன் சந்திப்பு: சிபிஐ குற்றச்சாட்டு பொய் என மறுப்பு

Subscribe to Oneindia Tamil

வேலூர்:

மத்திய அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்ட மதிமுகவைச் சேர்ந்த செஞ்சிராமச்சந்திரன் இன்று வேலூர் மத்திய சிறையில் கட்சியின் தலைவர் வைகோவைச் சந்தித்துப் பேசினார்.

மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசனும் உடன் சென்றார்.

தனது உதவியாளர் பெருமாள் சாமி மூலமாக வருமான வரித்துறை அதிகாரிகள் இடமாற்றத்துக்காகலட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கியதாக ராமச்சந்திரன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்துமும்பைக்கு டிரான்ஸ்பர் கேட்ட அனுராக் வர்தன் என்ற அதிகாரியிடம் இருந்து பெருமாள சாமி ரூ. 4 லட்சத்தைலஞ்சமாக வாங்கியபோது கையும் களவுமாகப் பிடிபட்டார்.

இந்த ஊழலில் தொடர்புடைய சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் கிருஷ்ணமூர்த்தியும் சிபிஐயால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந் நிலையில் பொடா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கட்சியின் தலைவர் வைகோவைச் சந்திக்கராமச்சந்திரன் இன்று வேலூர் வந்தார். அவரும் எல்.கணேசனும் வேலூர் சிறைக்குள் சென்று வைகோவுடன்நெடுநேரம் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் நிருபர்களிடம் செஞ்சி ராமச்சந்திரன் கூறியதாவது:

நான் தவறு செய்யவில்லை என்பதை பிரதமர் வாஜ்பாயை நேரில் சந்தித்து விளக்கிவிட்டேன். இன்று எங்கள்தலைவர் வைகோவிடமும் என்ன நடந்தது என்பதை விளக்கினேன்.

சினிமா நடிகர், நடிகைகள் வீட்டில் நான் ரெய்ட் நடத்துவதைத் தடுத்தாக சிலர் வதந்தி பரப்புகிறார்கள். இது மகாகேவலமான பொய்.

சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் கிருஷ்ணமூர்த்திக்கும் எனக்கும் தொடர்பு இருப்பதாக சொல்கிறார்கள். அவர் யார்என்றே எனக்குத் தெரியாது. அவர் கறுப்பா, சிவப்பா என்றும் தெரியாது. அவரை நான் சந்தித்தது கூட இல்லை.இந்த விவகாரத்தில் சிபிஐ இதுவரை முழு விளக்கத்தைத் தரவேயில்லை.

நான் சொத்து சேர்த்து வைத்திருக்கிறேனா என்பதை என் ஊரில் போய் என் வீட்டைப் பார்த்துவிட்டு வந்துசொல்லுகள். 40 வருடமாக நடந்தும், சைக்கிளிலும் போய் திமுகவுக்காக கட்சிப் பணியாற்றியவன். 40 ஆண்டு காலபொது வாழ்க்கையில் எளிமையாய் வாழ்ந்ததற்கு கிடைத்த பலன் தான் இது.

பெருமாள் சாமியை பி.ஏவாக வைத்ததற்காக நானே நொந்து கொள்ள வேண்டும். பழி ஓரிடம் பாவம் ஓரிடம்என்பது எனக்கு சரியாகப் பொறுந்தும். சிபிஐ என்னிடம் விசாரிக்க வந்தால் என் தரப்பு விளக்கத்தை உரியமுறையில் தருவேன்.

நான் அரசியலிலும் அரசியலும் நேர்மையானவன், திறமையாகப் பணியாற்றினேன். ஐ.ஆர்.எஸ். அதிகாரிகளின்இடமாற்றம் என் அதிகாரத்துக்கே வராது. வருமான வரி, கஸ்டம்ஸ், எக்ஸைஸ் துறை அதிகாரிகளை மாற்றுவதுசிபிடிடி மற்றும் சிபிஇசி ஆகிய வாரியங்களின் பொறுப்பாகும்.

அவர்கள் தான் இடமாற்றம் செய்வார்கள். இந்த பைல்களே என்னிடம் வராது. மிக மூத்த அதிகாரிகளை மாற்றும்அதிகாரம் கேபினட் அமைச்சருக்குத் தான் உண்டு. இணையமைச்சராக இருந்த எனக்கு அந்த அதிகாரமும் இல்லை.எனவே, அதிகாரிகள் மாற்றத்தில் நான் பணம் சம்பாதித்தேன் என்பது அர்த்தமே இல்லாத மிகப் பொய்யான ஒருகுற்றச்சாட்டு என்றார் ராமச்சந்திரன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+