கல்வி வியாபாரிகளுக்கு அரசு அள்ளி கொடுப்பது ஏன்? ராமதாஸ் கேள்வி
சென்னை:
தனியார் சுய நிதி பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக அரசு எடுத்துள்ளமுடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர்ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தனியார் சுய நிதி பொறியியல் கல்லூரிகள் 55சதவீத மாணவர் இடங்களை தாங்களே நிரப்பிக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது. இதுஏழை மாணவர்களையும், சமூக நீதியை நிலை நாட்டும் இட ஒதுக்கீட்டையும் மிகக் கடுமையாகபாதிக்கும்.
அரசின் இந்த முடிவினால் கல்வியை வியாபாரப் பொருளாக்கும் நபர்களிடம் சிக்கி மாணவர்கள்சீரழியும் நிலை ஏற்படும்.
40 சதவீத இடங்கள் மட்டுமே தனியார் சுய நிதி பொறியியல் கல்லூரிகளிடம் இருக்க வேண்டும்என்று மத்திய அரசு கொள்கை வகுத்துள்ளது. ஆனால் அதை மீறும் விதமாக 55 சதவீத இடங்களைஇந்த கல்வி வியாபாரிகளுக்கு தமிழக அரசு அள்ளிக் கொடுத்துள்ளது.
இதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்












Click it and Unblock the Notifications