ஜெர்மன் சென்றார் வாஜ்பாய்: ரஷ்யா, பிரான்சில் 8 நாள் பயணம்
டெல்லி:
பிரதமர் வாஜ்பாய் எட்டு நாள் சுற்று பயணமாக இன்று ஜெர்மனி புறப்பட்டுச் சென்றார். மேலும் ரஷ்ய, பிரான்ஸ்நாடுகளுககும் வாஜ்பாய் பயணம் மேற்கொள்கிறார்.
ரஷ்யாவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க்யின் 300வது ஆண்டு விழாவில் கலந்துகொள்வதற்காக வாஜ்பாய் அங்கு செல்கிறார்.
ஜெர்மன் புறப்படும் முன் டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் வாஜ்பாய் கூறியதாவது:
எல்லை தாண்டிய தீவிரவாதத்தை பாகிஸ்தான் முழுமையாகத் தடுத்து நிறுத்தினால் தான் அந் நாட்டுடன்அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்த முடியும். அதே நேரத்தில் பாகிஸ்தானுடனான உறவை வலுப்படுத்த பலநடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது.
டெல்லி-லாகூர் பேருந்து சேவையை மீண்டும் தொடங்கப் போகிறோம். இந்திய சிறைகளில் இருந்து 130பாகிஸ்தானியர்களை விடுதலை செய்யவும் உத்தரவிட்டுள்ளேன் என்றார்.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகர விழாவில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், பாகிஸ்தான் ராணுவஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் உள்ளிட்ட உலகத் தலைவர்களும் ரஷ்யா வர உள்ளனர். அப்போது ஜார்ஜ்புஷ்ஷை வாஜ்பாய் சந்தித்துப் பேசவும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
ஆனால், முஷாரபை அவர் சந்திக்க மாட்டார் என்று கூறப்படுகிறது.
ரஷ்ய பயணத்தை முடித்துக் கொண்டு வாஜ்பாய் பிரான்ஸ் செல்கிறார். பிரஞ்சு அதிபர் ஜாகுஸ் சிராக்கின்அழைப்பை ஏற்று வாஜ்பாய் அங்கு செல்கிறார்.
தனது இந்த மூன்று நாட்டுப் பயணத்தின்போது ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின், ஜெர்மன் அதிபர் ஜெரார்டுஸ்ரேடர், சீன அதிபர் ஹு ஜின்டாவ், பிரிட்டஷ் பிரதமர் டோனி பிளேர் மற்றும் கனடா பெலாரஸ் நாட்டுத்தலைவர்களுடனும் வாஜ்பாய் ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்தச் சந்திப்பின்போது இந்திய- பாகிஸ்தான் உறவுகள் முக்கிய இடம் பெறும் என்று தெரிகிறது.
பொருளாதாரம், அரசியல் விவகாரங்கள், மற்றும் சர்வதேச தீவிரவாதம் ஆகியவை குறித்தும் வாஜ்பாய் பேச்சுநடத்தவுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications