அக்னி நட்சத்திரம் முடிந்தது: ஆனாலும் வெயில் தொடருமாம்!
சென்னை:
கத்திரி வெயில் என செல்லமாக அழைக்கப்படும் அக்னி நட்சத்திர காலகட்டம் இன்று மாலையுடன்முடிவுக்கு வந்தது. இருப்பினும் இன்னும் சில நாட்களுக்கு கடும் வெயில் நிலவும் என்று வானிலைஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டு வெயில் கடுமையாக இருக்கிறது. குறிப்பாக அக்னி நட்சத்திர நாட்களில்வெயில் உச்சத்தை எட்டியது. கடந்த 21ம் தேதி தான் தமிழகத்திலேயே அதிக அளவாகஅரக்கோணத்தில் 116 டிகிரி வெயில் பதிவானது. அதற்கு அடுத்த நாள் சென்னை நகரில் 113டிகிரி வெயில் கொளுத்தியது.
கத்திரி நாட்களின்போது கடும் அனல் காற்று நிலவியதால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகபாதிக்கப்பட்டது. வெளியே தலை காட்ட முடியாமல் மக்கள் திணறினர்.
இருப்பினும் தென் தமிழகத்தில் சில பகுதிகளில் திடீர் திடீரென நல்ல மழையும் சூறாவளி காற்றும்வீசியது. இது கத்திரி வெயிலின் கொடுமையை ஓரளவுக்குக் குறைத்தது.
இந் நிலையில் இன்று மாலை 5 மணியுடன் கத்திரி வெயில் காலம் முடிந்தது. இருப்பினும் இன்னும்ஒரு சில நாட்களுக்கு அனல் காற்றும், கடும் வெப்பமும் குறையாது என்று வானிலை ஆராய்ச்சிநிலையம் கூறியுள்ளது.
படிப்படியாகத்தான் வெப்பம் குறையு என்றும் ஜூன் முதல் வாரத்திற்குள் வெப்ப நிலை சராசரிஅளவுக்குத் திரும்பி விடும் என்றும் வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்றைய வெப்பம்: 107 டிகிரி.
ஆந்திராவில் வெப்பத்தின் கொடுமை தமிழகத்தை விட அதிகமாக உள்ளது. அங்கு இந்த ஆண்டில்வெயிலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 494 ஆக உயர்ந்துள்ளது.
மதுரையில் கன மழை: இளைஞர் பலி
இந் நிலையில் மதுரையில் திடீரென கன மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் இளைஞர்பலியானார்.
சென்னை தவிர தமிழகத்தின் தென் மற்றும் மத்தியப் பகுதிகளில் அவ்வப்போது நல்ல மழை பெய்துவருகிறது.
மதுரையில் நேற்றிரவு கன மழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் மட்டுமே பெய்த இந்தமழையினால் மதுரை நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல ஓடியது.
பெரியார் பஸ் நிலையத்தில் தண்ணீர் நிறைந்தது. அந்த அளவுக்கு மழை கடுமையாக இருந்தது.
பலத்த இடி- மின்னலும் இந்த மழை பெய்தது. அப்போது கோரிப்பாளையம் பகுதியில் நடந்துசென்ற செந்தில் என்ற வாலிபர் மீது மின்னல் தாக்கியது. இதில் அவர் உடல் கருகி பரிதாபமாகஉயிரிழந்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications