இது அழகிரியின் சதிதான்- இதோ கொலையாளிகள் விவரம்: போலீஸ்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

Ibrahim Sulaiman Saitதா.கிருட்டிணன் கொலை சதியை மு.க.அழகிரிதான் தீட்டினார் என்று மதுரை போலீஸார்அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

கொலையைச் செய்தவர்கள் அழகிரியின் தீவிர ஆதரவாளர்களான மதுரை நகர் மாவட்ட திமுகமாணவர் மணி செயலாளர் முபாரக் மந்திரியும், நேற்று சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்தஇப்ராகிம் சுல்தான் சேட்டும் தான் என்று போலீசார் கூறியுள்ளனர்.

மற்ற அழகிரி ஆதரவாளர்கான மதுரை ஆவின் நிறுவன முன்னாள் தலைவர் மன்னன், வில்லாபுரம்கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் எஸ்ஸார் கோபி, முன்னாள் திமுக தொண்டர் அணி துணைஒருங்கிணைப்பாளர் கராத்தே சிவா ஆகியோர் தான் தா.கி.யை கொலை செய்வதற்கான திட்டத்தைபோட்டுக் கொடுத்தனர் என்றும் போலீசார் அறிவித்துள்ளனர்.

இவை அனைத்துமே அழகிரியின் நேரடி உத்தரவின் படி தான் நடந்துள்ளது.

அழகிரி வீட்டில் வைத்து தான் இந்த கொலைக்கான சதித் திட்டமே தீட்டப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டியுள்ள போலீசார் இவர்கள் அனைவரும் கொலையை ஒப்புக் கொண்டு வாக்குமூலம் எழுதித்தந்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

இந்தக் கொலை தொடர்பாக சரணடைந்த இப்ராகிம் சுலைமான் சேட் தவிர, அழகிரியின்ஆதர்வாளர்களான மன்னன், முபாரக் மந்திரி, எஸ்ஸார் கோபி, கராத்தே சிவா ஆகியோரைக் கைதுசெய்துள்ள போலீசார் அவர்களை இன்று அதிகாலை 3.45 மணிக்கு 6-வது குற்றவியல் நடுவர் மன்றமாஜிஸ்திரேட் வனிதாவின் வீட்டில் ஆஜர்படுத்தினர்.

இதுதொடர்பாக மதுரை போலீஸார் வெளியிட்ட அறிக்கை விவரம்:

மதுரை நகர் மாவட்ட திமுக மாணவர் மணி செயலாளர் முபாரக் மந்திரியும், இப்ராகிம் சுல்தான்சேட்டும் சேர்ந்துதான் கொலையைச் செய்துள்ளனர்.

இந்தக் கொலைக்கு திட்டம் தீட்டித் தந்தவர்கள் மன்னன், எஸ்ஸார் கோபி, கராத்தே சிவா ஆகியோர்.

அனைத்தும் அழகிரியின் உத்தரவின்படி தான் நடந்துள்ளன. இந்தக் கொலைக்கான சதித் திட்டம்உருவான இடமும் அழகிரியின் வீடு தான்.

திமுக உட்கட்சித் தேர்தல் தொடர்பாக கடந்த மே 17ம் தேதி அழகிரியின் வீட்டில் தா.கிருட்டிணன்தரப்புக்கும் அழகிரி தரப்பினருக்கும் கடும் மோதல் எழுந்தது. தென் மாவட்டங்களின் முக்கியபதவிகள் தவிர மதுரையில் ஒரு வார்டு செயலாளர் பதவிக்கும் தன் ஆதரவாளரைத் தான் நிறுத்தவேண்டும் என கிருட்டிணன் கூற அழகிரி கடும் கோபமடைந்தார்.

வீட்டில் இருந்த சில கண்ணாடிப் பொருள்களைத் தூக்கி எறிந்து ஆர்ப்பாட்டம் செய்த அவர்தேர்தலும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று தா.கிருட்டிணன் ஆட்களை விரட்டியடித்தார்.

Former Aavin Chairman Mannanஇதன் பின் ஆத்திரத்துடன் தனது ஆதரவாளர்களிடம் பேசிய அழகிரி, தா.கியை ஒழிச்சுக்கட்டுங்கடா என்று கூறிவிட்டு அதற்குத் தேவையான உதவியை மன்னனிடமிருந்து பெற்றுக்கொள்ளுமாறும் எஸ்ஸார் கோபியிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து எஸ்ஸார் கோபியும் மன்னனும் டவுன்ஹால் ரோட்டில் உள்ள ஒரு ஹோட்டலில்வைத்து கொலைக்கான சதித் திட்டத்தை இறுதி செய்தனர். இந்தக் கொலைக்கு முபாரக் மந்திரியின்உதவியை நாடவும் கூலிக்கு கொலை செய்யும இப்ராகிம் சுலைமான் சேட்டையும் இதில்ஈடுபடுத்தவும் முடிவு செய்தனர்.

இதையடுத்து முபாரக் மற்றும் சேட் ஆகியோரை வரவழைத்து இந்தக் கொலையைச் செய்யுமாறுஎஸ்ஸார் கோபி உத்தரவிட்டார்.

முபாரக்கிற்கு மதுரை நகர் மாவட்ட திமுக செயலாளர் பதவி கொடுக்கப்படும் என்றும் ஆசைகாட்டப்பட்டுள்ளது.

கொலை செய்வதற்குத் தேவையான ஆயுதங்கள், மோட்டார் சைக்கிளை எஸ்ஸார் கோபியேகொடுத்துள்ளார்.

மே 19ம் தேதி இரவு தா.கியின் வீட்டிற்கு அனைவரும் சென்றுள்ளனர். அவரது வீட்டை பலகோணங்களில் இருந்தும் பார்த்துக் கொண்ட பின்னர் அடுத்த நாள் அதிகாலையில் கொலையைசெய்துள்ளனர்.

தா.கியின் வீட்டிற்கு அருகே முபாரக் மந்திரியும், சேட்டும் மறைவாக நின்று கொண்டனர். தா.கி.தனது காலை நடைப் பயிற்சிக்காக வெளியே வந்ததும் அவரை கொலை செய்து விட்டு தப்பினர்.

கொலை தொடர்பாக தங்களை போலீஸ் தேடுவதைத் தெரிந்து கொண்ட முபாரக், எஸ்ஸார் கோபிமற்றும் அழகிரியின் இன்னொரு ஆதரவாளரான ஜெயராமன் ஆகியோர் 23ம் தேதி வக்கீல்களுடன்போலீஸ் நிலையம் வந்து கொலையை ஒப்புக் கொண்டனர். வாக்குமூலமும் அளித்தனர்.

இவர்கள் கொடுத்த வாக்குமூலத்தை வைத்து கொலைக்குப் பயன்படுத்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.மேலும் கொலையாளிகள் சென்ற மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தவிரகொலையின்போது இப்ராகிமும் முபாரக் மந்திரியும் அணிந்திருந்த உடைகளும் ரத்தக் கறைகளுடன்கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு போலீஸ் அறிக்கை கூறுகிறது.

கைது செய்யப்பட்ட நான்கு பேரும் கடந்த 5 நாட்களாகவே மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில்பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தனர்.

இந் நிலையில் இன்று அதிகாலை மாஜிஸ்திரேட் வனிதாவின் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர்இந்த நால்வரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பகலில் இவர்களைநீதிமன்றத்துக்கு கொண்டு வருவது பாதுகாப்பானதல்ல என்பதால் தான் அதிகாலையிலேயே நீதிபதிவீட்டில் போலீசார்ஆஜர்படுத்தியதாகத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+