இப்ராகிம்: வெடிகுண்டு வீசுவதிலும் கில்லாடி!
மதுரை:
தா.கி. கொலை வழக்கில் சென்னை நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்த இப்ராகிம் சுலைமான்சேட்டின் கூட்டாளியான சுருளி என்பவரும் கொடைக்கானல் மலைப் பகுதியில்பதுங்கியிருந்தபோது பிடிபட்டார். இவரும் தா.கியைக் கொன்ற கும்பலில் இடம்பெற்றிருந்தார்என்று கூறப்படுகிறது.
இப்ராகிம் சுலைமான் சேட் ஏற்கனவே பல வழக்குகளில் பல முறை கைதானவர் என்று தெரியவருகிறது. அயோத்தியில் பாபர் மசூதியை இடிக்கப்பட்டதன் நினைவு நாளையொட்டி 2ஆண்டுகளுக்கு முன் இவரை முன்னெச்சரிக்கையாக மதுரை போலீசார் கைது செய்தனர்.
அப்போது இவரது வீட்டில் சோதனை நடத்தியபோது ஏராளமான வெடிகுண்டுகளும்கைப்பற்றப்பட்டன.
வெடிகுண்டுகள் தயாரிப்பதிலும் அவற்றை இயக்குவதிலும் இவர் கை தேர்ந்தவர் என்றுகூறப்படுகிறது. தொழில் முறையில் குற்றங்கள் செய்வது இவர் வழக்கமாம்.
கொடைக்கானில் சிக்கிய சுருளி:
சுலைமான் சேட்டின் கூட்டாளியான சுருளி என்பவரும் தா.கியைக் கொன்ற கும்பலில் இடம்பெற்றிருந்ததாகத் தெரிகிறது.
சுருளியும் பிரபலமான குற்றவாளிதான். பலமுறை போலீஸாரின் பிடியிலிருந்து தப்பியவர்.இதுவரை தா.கியையும் சேர்த்து இவர் 9 கொலைகளை மதுரையில் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மதுரை அருகே உள்ள ஒத்தகடை பகுதியைச் சேர்ந்தவர் சுருளி. 2 ஆண்டுகளுக்கு முன் மதுரைமேலமாசி வீதியில் புஷ்பராஜ் என்பவரை பட்டப்பகலில் பொதுமக்கள் மத்தியில் வெட்டிக்கொன்றார் இவர்.
தா.கி. படுகொலைக்குப் பின் சுருளி, கொடைக்கானல் தப்பி விட்டார். அவரைப் பிடிக்க போலீஸ்படை விரைந்தது. அவர்களிடமிருந்து சுருளி தப்பிக்க முயன்று தோல்வியுற்றார்.
அவரை கோழி அமுக்குவது போல பிடித்து வந்துவிட்டனர் மதுரை போலீசார். இன்னும் இவர் மீதுகுற்றம் பதிவு செய்யப்படவில்லை. தல்லாகுளம் காவல் நிலையத்தில் வைத்து இவரை கவனிக்கும்விதத்தில் கவனித்து விவரங்களைக் கறந்து வருகின்றனர் போஸ் தலைமையிலான போலீஸ்அதிகாரிகள் குழு.
இதன் பின்னர் இவர் மீது எப்.ஐ.ஆர். போடப்பட்டு மற்ற நால்வருடன் சேர்த்து உள்ளேதள்ளப்படுவார் என்கிறது மதுரை போலீஸ் வட்டாரம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications