பொடா சட்டத்தில் தவறாக கைதாகியுள்ள மதிமுக நிர்வாகி: மறைக்கும் போலீஸ்
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் மதிமுகவைச் சேர்ந்தவர் தவறுதலாக கைது செய்யப்பட்டிருப்பதாக பொடாநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட 8 மதிமுகநிர்வாகிகள் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் பூமிநாதன் என்ற நிர்வாகி கைது செய்யப்பட்டதில் தவறு நடந்துள்ளதாக மதிமுகசார்பில் ஆஜரான வக்கீல் தினகரன் பொடா நீதிபதி ராஜேந்திரனிடம் புகார் தெரிவித்தார்.
மதுரை திருமங்கலத்தில் நடந்த கட்சிக் கூட்டத்தில் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாகஎம்.பூமிநாதன் என்பவரைக் கைது செய்துள்ளனர். ஆனால், அந்த நிகழ்ச்சியின் வீடியோவ்ைபோட்டுப் பார்த்தபோது கைது செய்யப்பட்ட ஆர்.பூமிநாதன் அதில் இல்லை.
மதுரை மாநகர மதிமுக செயலாளர் பூமிநாதன்தான் வீடியோவில் உள்ளார்.
தங்களது தவறை காலதாமதாகவே உணர்ந்த காவல் துறையினர், அதை மறைப்பதற்காக,ஆர்.பூமிநாதன் தான் அந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர் என்று குற்றப் பத்திரிக்கையில்குறிப்பிட்டுள்ளனர் என்றார் வக்கீல் தினகரன்.
இதனால் ஆச்சரியமடைந்த நீதிபதி ராஜேந்திரன், ஆர்.பூமிநாதன் மீது தாக்கல் செய்யப்பட்டஎப்.ஐ.ஆரில் ஒரு மாதிரியாகவும், குற்றப் பத்திரிக்கையில் வேறு மாதிரியாகவும் குற்றம்குறிப்பிடப்பட்டுள்ளது குறித்து அரசு வக்கீலிடம் விளக்கம் கேட்டார்.
ஆனால், இது தொடர்பாக விளக்கமளிக்க அவகாசம் தேவை என்று அரசு வக்கீல் கூறினார்.
இதைத் தொடர்ந்து தற்காலிகமாக இப்பிரச்சினை கைவிடப்பட்டுள்ளது.
மருத்துவனையில் சங்கிலியால் பிணைத்து...
இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இன்னொரு பொடா கைதியை கைமற்றும் கால்களில் சங்கிலி போட்டு கட்டி வைத்திருப்பது குறித்து விளக்கம் தருமாறு தமிழக கியூபிரிவு போலீஸார் மற்றும் சேலம் சிறை நிர்வாகிகளுக்கு பொடா நீதிபதி ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
தர்மபுரியில் கைது செய்யப்பட்ட நக்சலைட்டான சக்திவேல் என்பவர் மீது பொடா சட்டத்தில்வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால், மே 23ம் தேதி சேலம் அரசு மருத்துவமனையில்அவருக்கு அறுவைச் சிகிச்சை நடந்தது.
அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டார்.
அங்கு படுக்கையில் கை, கால்களை போலீசார் சங்கிலியால் பிணைத்து கட்டிலுடன கட்டினர்.இதுகுறித்து சக்திவேலின் வக்கீல் பொடா நீதிபதி ராஜேந்திரனின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.
போலீஸாரின் செயல் காட்டுமிராண்டித்தனமானது என்று கூறிய அவர், மனித உரிமைகளை மீறும்வகையில் போலீஸார் நடந்து கொண்டுள்ளனர். உச்சநீதிமன்றம் வகுத்துள்ள நெறிமுறைகளைகாற்றில் பறக்க விட்டுள்ளனர் என்றார்.
இதையடுத்து இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு சேலம் சிறை நிர்வாகிகள் மற்றும் கியூபிராஞ்ச் போலீஸாருக்கு நீதிபதி ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications