திமுக தேர்தலில் ஸ்டாலின் கை ஓங்கியது!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தா.கிருட்டிணன் படுகொலை சம்பவத்தின் பின்னணியில் நடந்து முடிந்துள்ள திமுக உட்கட்சித்தேர்தலில், கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும், ஸ்டாலின் ஆதரவாளர்களே வெற்றிபெற்றுள்ளனர்.

தா.கியின் படுகொலைக்குப் பிறகு பல மாவட்ட செயலாளர் பதவிகள் ஒருமனதான தேர்வின் மூலம்நிரப்பப்பட்டுள்ளன. பல பகுதிகளில் தேர்தல் நடத்தாமல், கூடிப் பேசி விவாதித்து மாவட்டசெயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு தேர்வானவர்கள் அனைவருமே ஸ்டாலின்ஆதரவாளர்கள் தான்.

சிவகங்கை மாவட்ட செயலாளராக, தா.கியின் நெருங்கிய நண்பரான பெரியகருப்பன் ஒருமனதாகதேர்வு செய்யப்பட்டார். மதுரை மாவட்ட திமுக செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ. வேலுச்சாமிஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர்கள் இருவருமே ஸ்டாலின் ஆதரவாளர்கள்.

இவர்களுக்காகத் தான் அழகிரியுடன் தா.கிருட்டிணன் மோதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

விருதுநகர் மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்குப் போட்டியாக அழகிரியின் தீவிர ஆதரவாளரான தங்கம்தென்னரசு இருந்தார். ஆனால் அழகிரி சிறையில் தள்ளப்பட்டதையடுத்துகே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் கை ஓங்கிவிட்டது. இதனால் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்.

தூத்துக்குடியில் பெரியசாமியும், தேனியில் மூக்கையா தேவரும், ராமநாதபுரத்தில் டி.சம்பத்தும்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஸ்டாலின் ஆதரவாளர்கள். இதன் மூலம் தென்மாவட்டங்களில் அழகிரியின் கோட்டையை ஸ்டாலின் தகர்த்துள்ளார்.

ஆனால், திருநெல்வேலியில் மட்டுமே அழகிரியின் ஆதரவாளரான ஆவுடையப்பன் மாவட்டசெயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மேலும் அழகிரிக்கு நெருக்கமான காவேரி மணியம், மதுரை நகர திமுக செயலாளராகதொடர்கிறார். இதற்கு கருணாநிதியின் தலையீடே காரணம். அழகிரி ஆதரவாளாக இருந்தாலும்கருணாநிதி சொல்லிவிட்டால் எதையும் செய்யக் கூடியவர் காவேரி மணியம்.

திருச்சியில் கே.என்.நேரு, தர்மபுரி வடக்கு மாவட்டத்திற்கு புலவர் செங்குட்டுவன் ஆகியஸ்டாலின் ஆதரவாளர்கள் மாவட்டச் செயலாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையைப் பொருத்தவரை தென் சென்னை மாவட்ட செயலாளர் பதவிக்கு ஜெ.அன்பழகன்எம்.எல்.ஏ. தேர்வு செய்யப்படும் வாய்ப்பு உள்ளது. உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள சைதைகிட்டுவுக்கு ஓய்வு தரப்படுகிறது.

அதேபோல வட சென்னை மாவட்டத்திற்கு பலாரமன் மீண்டும் போட்டியின்றித் தேர்வுசெய்யப்படுவார் என்று தெரிகிறது.

தா.கிருட்டிணன் படுகொலை காரணமாக அழகிரி தரப்பு வலுவிழந்துவிட்டதைப் பயன்படுத்திஸ்டாலின் தனது ஆதரவாளர்களை தென் மாவட்டங்களின் முக்கியப் பதவிகளில் அமர்த்திவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+