அடித்து, துன்புறுத்தி பொய் வாக்குமூலம் வாங்கியதா போலீஸ்?
மதுரை:
தா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வரும், சரணடைந்தவரும் இந்தக் கொலைக்கும்தங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளனர்.
போலீசார் தான் தங்களை அடித்துத் துன்புறுத்தி இந்தக் கொலையை ஒப்புக் கொள்ளச் செய்ததாக நீதிபதியிடம்கூறியுள்ளனர்.
இந்த நால்வரும் தான் கொலைக் குற்றவாளிகள் என்று மன்னன், முபாரக் மந்திரி, எஸ்ஸார் கோபி, கராத்தே சிவாஆகியோர் இன்று அதிகாலை 3.45 மணிக்கு நீதிபதி வனிதாவின் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்துநால்வரையும் வரும் ஜூன் மாதம் 11ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அப்போது நீதிபதியிடம் இந்த நால்வரும் கூறியதாவது:
இந்சக் கொலைக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எங்களை அடித்துத் துன்புறுத்தித் தான் போலீசார்வாக்குமூலத்தை எழுதி வாங்கினர். போலீசார் தாக்கியதில் ( உடலெங்கும் இருந்த ரத்தக் காயங்களைக் காட்டி)நாங்கள் மிகவும் காயம் பட்டிருக்கிறோம். இதனால், எங்களை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்என்றனர்.
தனித்தனியே சொல்லுங்கள் என்று திமுக வழக்கறிஞர்கள் கூற, நால்வரும் நீதிபதியிடம் கூறியதாவது:
பி.மன்னன் கூறியதாவது:
அழகிரி சொல்லித் தான் தா.கிருட்டிணனை நாங்கள் கொலை செய்தோம் என்று கூறும்படி போலீசார் எங்களைஅடித்துத் துன்புறுத்தினார்கள். இதில் எனது வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது (காயத்தை காட்டுகிறார்)என்றார்.
எஸ்ஸார் கோபி கூறியதாவது:
கடந்த 5 நாட்களுக்கு முன்னரே எங்களைப் பிடித்துச் சென்றுவிட்டார்கள் இந்த போலீசார். கொலைக்கும்எஙகளுக்கும் தொடர்பு உண்டு என்று ஒப்புக் கொள்ளச் சொல்லி தனி அறையில் போட்டு அடித்து, உதைத்துசித்திரவதை செய்தனர். என் குடும்பத்தினரைக் கூட என்னைச் சந்திக்க விடவில்லை. அடியால் என் உடல் முழுவதும்காயம் ஏற்பட்டுள்ளது.
கராத்தே சிவா கூறியதாவது:
அண்ணன் மு.க. அழகிரியும் மன்னனும் சேர்ந்து தான் தா.கிருட்டிணனை கொலை செய்யச் சொன்னார்கள் என்றுசொல்லும்படி என்னிடம் போலீசார் கூறினார்கள். நான் அதைச் சொல்ல மறுத்தேன். இதையடுத்து சங்கிலியால்கட்டிப் போட்டு அடித்து உதைத்தார்கள். பின்னர் அவர்கள் சொன்னது போலவே என்னிடம் வாக்குமூலம் எழுதிவாங்கிக் கொண்டார்கள்.
போலீசார் அடித்ததில் உடலில் எல்லா இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன (காயங்களை காட்டினார்).
முபாரக் மந்திரி கூறியதாவது:
என்னை மதுரைக்கு வெளியே ஒரு பகுதிக்கு இரவில் போலீசார் அழைத்துச் சென்றனர். இந்தக் கொலையைஅழகிரி அண்ணன் தான் செய்யச் சொன்னார் என்று எழுதித் தரச் சொன்னார்கள். ஆனால், எனக்கும் இந்தக்கொலைக்கும் தொடர்பு இல்லை என்று மறுத்தேன். இதையடுத்து கொலையை ஒத்துக் கொள்டா என்று சொல்லிஅடி அடி என அடித்தனர். கொலையை ஒத்துக் கொள்ளாவிட்டால் ஓட ஓட விரட்டிச் சுடுவோம் என்றுதுப்பாக்கியைக் காட்டி போலீஸ்காரர்கள் மிரட்டனார்கள் என்றார்.
இதையெல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட நீதிபதி வனிதா இதையெல்லாம் எழுதிக் கொடுங்கள் என்றார்.இதையடுத்து நால்வரும் தங்களுக்கு போலீசாரிடம் நடந்த கொடுமைகளை எழுதித் தந்தனர்.
பின்னர் மருத்துவ சிகிச்சை தேவை என்பதையும் எழுதுப்பூர்வமாகத் தருமாறு நீதிபதி கேட்க, அதையும் அவர்கள்எழுதித் தந்தனர். இதைத் தொடர்ந்து போலீசாரிடம் பேசிய நீதிபதி, சிறை விதிகளின்படி மருத்துவ சிகிச்சைஅளிக்க ஏற்பாடு செய்யுங்கள் என்றார்.
இதையடுத்து அதிகாலை 4.15 மணியளவில் மிக பலத்த பாதுகாப்புடன் 4 பேரும் மதுரை மத்திய சிறைக்குக்கொண்டு செல்லப்பட்டனர். இவர்கள் கொண்டு வரப்பட்ட வேனுக்கு முன்பாகவும் பின்னும் 8 போலீஸ் ஜீப்களில்ஆயுதம் தாங்கிய போலீசார் உடன் வந்தனர்.
இப்ராகிமும் மறுப்பு:
இதே போலத் தான் இந்தக் கொலைக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என நேற்று சென்னை நீதிமன்றத்தில்சரணடைந்த இப்ராகிம் சுலைமான் சேட்டும் மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
மாஜிஸ்திரேட்டிடம் அவர் கூறியதாவது:
தா.கிருட்டிணன் கொலை வழக்கில் என்னையும் போலீசார் ஒரு குற்றவாளியாக சேர்த்ததை அறிந்தேன். இதற்கும்எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், போலீசார் என்னை அடித்துத் துன்புறுத்துவார்கள் என்று பயந்தேன்.இதனால் நீதிமன்றத்திடம் சரணடைந்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
சரணடைந்த பின்னர் நிருபர்களிடம் இப்ராகிம் கூறுகையில், நான் அழகிரி ஆதரவாளன் அல்ல, நான் லாரிடிரைவர். என் தெருவில் அழகிரியின் ஆட்கள் வசிக்கிறார்கள். அவர்கள் வீட்டுக்கு அருகே என் வீடும் உள்ளது.இதனால் என்னையும் வழக்கில் சேர்த்துள்ளனர்.
நான் சென்னையில் உள்ள என் உறவினர் வீட்டுக்கு வந்திருந்தேன். அப்போது மதுரையில் உள்ள என் வீட்டுக்குச்சென்ற போலீசார் என் குடும்பத்தினரை மிரட்டியுள்ளனர். இதனால் அவர்கள் பயந்து போய்விட்டனர். உடனேஅந்தத் தகவலை எனக்குத் தந்தனர். இதனால் சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்துவிட்டேன் என்றார்.
குழப்பமும் முரண்பாடு:
கொலையாளிகள் இவர்கள் தான் என போலீசார் கூறுகின்றனர். அவர்களே கொலையை ஒப்புக் கொண்டதாகவும்கூறுகின்றனர். ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அதை முழுமையாக மறுக்கின்றனர்.
தங்களை அடித்து துன்புறுத்தித் தான் வாக்குமூலம் வாங்கப்பட்டதாகக் கூறியுள்ளனர். யார் சொல்வது உண்மைஎன்பது நீதிமன்ற விசாரணையில் தான் தெரியவரும்.












Click it and Unblock the Notifications