மு.க. அழகிரிக்கு ஜாமீன் மறுப்பு: மேலும் 9 திமுகவினர் கைது
மதுரை:
மு.க.அழகிரிக்கு ஜாமீன் வழங்க மதுரை நீதிமன்றத்தில் மறுத்துவிட்டது.
முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில்அடைக்கப்பட்டுள்ள மு.க.அழகிகி. இவர் தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி மதுரைமுதலாவது விரைவு நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.
அந்த மனு மீது விசாரணை நடந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான சென்னை வக்கீல்சுப்ரமணியன், தா.கிருட்டிணனுக்கும் அழகிரிக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்துள்ளது.
இதற்கு ஆதாரமாக இந்த இருவரும் திமுக தலைவர் கருணாநிதிக்கு எழுதிய கடிதங்கள் சிக்கியுள்ளன.
இந் நிலையில் இப்போது அழகிரியை ஜாமீனில் விட்டால் சாட்சிகளை அவர் கலைத்து விடுவார்.எனவே ஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதாடினார்.
அழகிரி சார்பில் பிரேம்குமார் அம்புரோஸ் உள்ளிட்ட 3 வக்கீல்கள் ஆஜராகினர். அவர்கள்,அழகிரிக்கும் இந்தக் கொலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இதனால் அவரை ஜாமீனில்விடுவிக்க வேண்டும் என்றனர்.
ஆனால், கொலை தொடர்பான போலீஸ் விசாரணை ஆரம்பக் கட்டத்தில் இருப்பதால் இப்போதையநிலையில் அழகிரிக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி ஜாமீன் மனுவை நிராகரித்தார் நீதிபதிஉதயன்.
மேலும் 9 திமுகவினர் மீதும் வழக்கு:
இந் நிலையில் தா.கிருட்டிணன் கொலை வழக்கு தொடர்பாக விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட 9 திமுகவினர் திடீரென்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
தா.கிருட்டிணன் கொலை வழக்கு தொடர்பாக தல்லாகுளம் மற்றும் சத்திரப்பட்டி காவல் நிலையஎல்லைக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த குருசாமி, மாணிக்கம், நாகஷ்ே, ஆரோக்கிய பாண்டியன்,உதயகுமார் உள்ளிட்ட 9 திமுகவினரை போலஸீார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
விசாரணை முடிந்து இவர்கள் அனுப்பப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,அவர்களையும் இன்று போலீசார் திடீரென கைது செய்வதாக அறிவித்தனர்.
பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை மதுரை 4-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோலீசார் 15 நாள் காவலில் சிறையில் அடைத்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications