காஷ்மீரில் ராணுவத்தினர் தாக்கி 21 தீவிரவாதிகள் சாவு
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் அனந்த்நாக் மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 21 தீவிரவாதிகள்கொல்லப்பட்டனர்.
அனந்த்நாக்கில் உள்ள லச்சிபுரா என்ற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்தினருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று அதிகாலை ராணுவ வீரர்கள் இப் பகுதியை சுற்றி வளைத்தனர்.
அப்போது தீவிரவாதிகள் திடீரென ராணுவத்தினரை நோக்கிச் சுட்டனர். இதையடுத்து ராணுவ வீரர்கள் பதில்தாக்குதல் நடத்தினர். இதில் 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது. இதனால் சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.
அதே போல பூஞ்ச் மாவட்டத்தில் பிர் பஞ்சால் என்ற இடத்தில் பாகிஸ்தானில் இருந்து எல்லை தாண்டி வந்ததீவிரவாதிகளை ராணுவத்தினர் சுற்றி வளைத்துத் தாக்கினர். இதில் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
4 தீவிரவாதிகள் சரண்:
இதற்கிடையே இதே மாவட்டத்தில் அல்-கொய்தாவைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவனும் ஜெய்ஷ்-ஏ-முகம்மத்தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 3 பேரும் போலீசாரிடம் சரணடைந்தனர்.
முன்பே வெடித்த குண்டு: 3 தீவிரவாதிகள் காயம்
அதே போல புல்வாமா மாவட்டத்தில் வெடிகுண்டுகளை வைக்கும்போது அவை முன்பே வெடித்ததில் 3 ஹிஸ்புல்முஜாகிதீன் தீவிரவாதிகள் படுகாயமடைந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து மருத்துவமனையில்சேர்த்துள்ளனர். போலீசாரின் வாகனங்களைக் குறி வைத்து கலந்தர்-சம்பூரா இடையிலான நெடுஞ்சாலையில்இவர்கள் குண்டு வைத்துக் கொண்டிருந்தபோது அது வெடித்துவிட்டது.
பாக். படைகள் தாக்குதல்:
இந் நிலையில் ரஜெளரி மாவட்டத்தில் இந்தியப் படைகள் மீது பாகிஸ்தானியப் படைகள் இன்று காலை முதல் கனரகத் துப்பாக்கிகளால் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதையடுத்து இந்தியப் படைகளும் பதில் தாக்குதல் நடத்திவருகின்றன.
அல்-கொய்தா ஆள் சேர்ப்பு:
இதற்கிடையே காஷமீரில் தற்கொலைத் தாக்குதல்கள் நடத்த அல்-கொய்தா தீவிரவாதிகள் இளைஞர்களை அதிகஅளவில் தனது அமைப்பில் சேர்த்து வருவதாக ராணுவ உளவுப் பிரிவு கண்டறிந்துள்ளது. மேலும் காஷ்மீரில்தாக்குதல்களை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது.
இதையடுத்து காஷ்மீரில் பாதுகாப்புப் பணிக்கு 10 கூடுதல் பட்டாலியன் ராணுவப் படைகளை மத்திய அரசுஅனுப்பியுள்ளது.
இந்தப் படைகள் தங்களது தேடுதல் வேட்டையைத் தொடங்கிவிட்டதாகவும் கடந்த 3 நாட்களில் 45 தீவிரவாதிகள்கொல்லப்பட்டுள்ளதாகவும் ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications