கொடைக்கானலில் கொளுத்திய வெயில்!
கொடைக்கானல்:
கோடை கொடுமையிலிருந்து தப்புவதற்காக கொடைக்கானல் சென்ற சுற்றுலாப் பயணிகளுக்குஅதிர்ச்சி அளிக்கும் விதமாக, நேற்று கொடைக்கானலில் கடும் வெயில் வாட்டி எடுத்தது.
இதனால் சுற்றுலா சென்றவர்கள் லாட்ஜ்களிலேயே அடைபட்டுக் கிடக்கும் சூழல் உருவானது.
தமிழகம் முழுவதிலும் கடந்த 20 நாட்களாக வெயில் வறுத்தெடுத்து வருகிறது. இதனால் வெயிலில்இருந்து தப்ப குளு குளு பகுதிகளான ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, முதுமலை, குற்றாலம்போன்ற சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
ஆனால், நேற்று கொடைக்கானல் சென்றவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. குளுகுளுவுக்குப் பதில் கடு கடு வெயில் வறுத்தெடுத்தது.
கடும் வெயிலால் ஊரைச் சுற்றிப் பார்க்கச் சென்றவர்கள் அதைத் தவிர்த்துவிட்டு லாட்ஜ்களுக்கேதிரும்பி ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது. மாலையில் தான் அவர்கள் மீண்டும் வெளியே வந்தனர்.
ஒரு நாள் பயணமாக கார்கள், வேன்களில் சென்றவர்கள் மர நிழல்களிலேயே பெரும்பாலானநேரத்தைக் கடத்த வேண்டிய நிலை உருவானது. இதனால் மரத்தடிகளில் தான் கூட்டம்அலைமோதியது.
கொடைக்கானலுக்கு வந்து இப்படி வியர்வையில் நனைய நேரிட்டதை நினைத்து சுற்றுலாப்பயணிகள் நொந்து போயினர்.
வழக்கமாக வெள்ளி நீர் வீழ்ச்சியை பார்ர்பதோடு நின்று விடும் சுற்றுலா பயணிகள், நேற்று அடித்தவெயில் காரணமாக, உயிரைப் பணயம் வைத்து நீர் வீழ்ச்சியில் நின்று தங்களை அசுவாசப்படுத்திக்கொண்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications