மனைவியைக் கொன்று போலீஸ்காரர் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மனைவியின் மீது சந்தேகமடைந்த போலீஸ்காரர் அவரைக் கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டுதற்கொலை செய்து கொண்டார்.
கூடுதல் டிஜிபி ஜெகன் சேஷாத்ரியின் கீழ் அவரது அலுவலகத்தில் பணியாற்றி வந்த போலீஸ்காரர்நடராஜன். இவர் திருவல்லிக்கேணியில் வசித்து வந்தார். இவரது மனைவி ஸ்ரீதேவி. இவர்களுக்குஒன்றரை வயதில் குழந்தை உள்ளது.
மனைவியின் நடத்தையின் மீது நெடுங்காலமாகவே சந்தேகத்துடன் இருந்து வந்த நடராஜன்.இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்.
இன்று காலையும் சண்டை மூண்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த நடராஜன், மனைவியின்கழுத்தை கத்தியால் அறுத்துக் கொலை செய்தார்.
பின்னர் தன் மீது மண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் கருகிய நிலையில் கிடந்த அவரைஅக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சைப்பலனின்றி அவர் இறந்தார்.












Click it and Unblock the Notifications