வீரப்பனுக்கு பணம்: ஆற்காடு வீராசாமியிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை
சென்னை:
நடிகர் ராஜ்குமாரை மீட்க வீரப்பனுக்கு பணம் கொடுத்ததாக எழுந்துள்ள புகாரின் அடிப்படையில்முன்னாள் திமுக அமைச்சர் ஆற்காடு வீராசாமியிடம் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் இன்று விசாரணைநடத்தினர்.
ராஜ்குமாரை வீரப்பன் பிடியிலிருந்து மீட்க பல கோடி ரூபாய் கை மாறியதாக கர்நாடக முன்னாள்டிஜிபி தினகர் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக அப்போதைய முதல்வர் கருணாநிதிவீட்டில் வைத்து பணம் கை மாறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து விசாரணைக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி நக்கீரன்பத்திரிக்கை ஆசிரியர் கோபால், நிருபர் சிவசுப்பிரமணியம் ஆகியோரிடம் விசாரணை நடந்தது.
இது குறித்து தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறன் மற்றும் திமுக தலைவர்கருணாநிதியிடமும் விசாரணை நடத்தப்படும் என்று லஞ்ச ஒழிப்புப் போலீசார் கூறியிருந்தனர்.
இந் நிலையில் இன்று ஆற்காடு வீராசாமியிடம் விசாரணை நடந்தது. இன்று காலை அவர்சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புப் போலீஸ் தலைமை அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டார்.
உடல் நலமில்லை என்பதால் பின்னொரு நாளில் வருவதாக அவர் கூறிப் பார்த்தார். ஆனால், நீங்கள்வராவிட்டால் உங்கள் வீட்டிலேயே வைத்து விசாரணை நடத்த வேண்டி வரும் என போலீசார்கூறினர்.
இதையடுத்து அவர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகம் வந்தார். அவரிடம் சுமார் 1 மணி நேரம்விசாரணை நடந்தது.
விசாரணைக்குப் பின் வெளியே வந்த வீராசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், கர்நாடகமுதல்வர், உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் சென்னை வந்த போது என்னபேசினீர்கள், பெங்களூருக்கு கருணாநிதி சென்றபோது என்ன பேசினீர்கள் என்பது உள்பட பல்வேறுகேள்விகளைக் கேட்டார்கள்.
பணம் கைமாறிய விவகாரம் குறித்த கேள்வியையும் கேட்டார்கள். அதற்கு, அப்படி ஒரு சம்பவமேநடக்கவில்லை. கற்பனையான முறையில் தினகர் எழுதியுள்ளார் என்று கூறினேன்.
யாரோ சிலரின் தூண்டுதல் காரணமாகவே இந்தப் புத்தகத்தை தினகர் எழுதியுள்ளார் என்றும்தெரிவித்தேன்.
திமுகவையும், தலைவர் கருணாநிதியையும் அவமானப்படுத்த வேண்டும், அவதூறுக்குள்ளாக்கவேண்டும் என்பதற்காகவே இந்த பொய்யான விசாரணையை அதிமுக அரசு நடத்தி வருகிறதுஎன்றார் ஆற்காடு வீராசாமி.
வீராசாமியிடம் நடந்த விசாரணையில் கிடைத்த தகவல்களை வைத்து விரைவில் கருணாநிதியிடமும்இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications