சமரச திட்டத்தை நிராகரித்தனர் புலிகள்: இந்தியா மீது தாக்கு
கொழும்பு:
மீண்டும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வைக்க தங்களுக்கு பொருளாதாரச் சுதந்திரம் அளிக்க முன் வந்துள்ளஇலங்கை அரசின் சமரசத் திட்டத்தை விடுதலைப் புலிகள் நிராகரித்துள்ளனர். அதே போல இந்தியாவையும்அமெரிக்காவையும் மறைமுகமாகத் தாக்கியுள்ளனர்.
வட-கிழக்கு மாகாணங்களில் மறு கட்டமைப்பு மற்றும் மறு குடியேற்றப் பணிகளை மேற்கொள்ள ஒரு அமைப்பைநிறுவுவதாகவும், அந்த அமைப்பில் விடுதலைப் புலிகளுக்கு முக்கிய இடம் தருவதாகவும், குறிப்பாக நிதியும்.பொருளாதாரச் சுதந்திரமும் வழங்குவதாகவும் சமீபத்தில் இலங்கை அரசு அறிவித்தது.
இந்த சமரசத் திட்டத்தின் மூலம் புலிகளை மீண்டும் பேச்சுவார்த்தைகளுக்கு வரவழைக்க இலங்கை முயன்றது. இதுகுறித்து நார்வே சமரசத் தூதர்கள் மூலம் புலிகளுடன் அரசு பேசியது. ஆனால், இந்தத் திட்டத்தை ஏற்க புலிகள்மறுத்துவிட்டனர்.
இது குறித்து புலிகள் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டுமானால் வட-கிழக்குப் பகுதியில் சுயாட்சி கொண்ட இடைக்காலநிர்வாகத்தை அமைக்க அரசு முன் வர வேண்டும். எங்களது இந்தக் கோரிக்கையை நிராகரித்துவிட்டுபொருளாதாரத்தை முன் வைத்து சமரசத் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளதை ஏற்க மாட்டோம்.
எதற்காக சுயாட்சி கொண்ட இடைக்கால நிர்வாகத்தை அமைக்க அரசு தயங்குகிறது என்பதை விளக்க வேண்டும்.
வட கிழக்கு மாகாணங்களில் மறு சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள உருவாக்கப் போவதாக அமைப்புஇலங்கையின் அரசின் நிர்வாகக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதாக இருக்கும். செயல்படாத பல இலங்கைஅரசுத்துறைகள் தான் இந்த அமைப்பில் இருக்கப் போகின்றன.
இந்த அமைப்பை வைத்துக் கொண்டு என்ன தான் நிதித் சுதந்திரம் தந்தாலும் மறுசீரமைப்புப் பணிகளை நடத்துவதுஎன்பது நடக்காத காரியமாகும். எங்கள் மக்களின் மனிதாபிமான, அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றஎங்களுக்குத் தேவை சுதந்திரமான இடைக்கால நிர்வாகம் தான் என்று கூறப்பட்டுள்ளது.
புலிகளின் இந்த அறிவிப்பால் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட முட்டுக்கட்டை நீங்குவதற்கான வாய்ப்புக்கள்குறைந்துள்ளன.
ரணிலுக்கு பாலசிங்கம் கடிதம்:
இதற்கிடையே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், வட-கிழக்குப் பகுதியில் விடுதலைப்புலிகள் இயக்கம் ஏற்கனவே தனி அரசாங்கம் நடத்திக் கொண்டிருப்பதை உங்களுக்கு வசதியாக மறந்துவிட்டு,ஏதோதோ சலுகைகளை வழங்குவதாகப் பேசி வருகிறீர்கள்.
நீங்கள் கொடுக்க முன் வருவதை அதிகமான சுதந்திரம் எங்களிடம் இருக்கிறது. அமைதிப் பாதைக்குத் திரும்பும்எங்களது முயற்சிகளுக்கு சில சர்வதேச நாடுகளும் தெற்காசிய நாடுகளுமே தடைளாக இருந்து வருகின்றன.இன்னும் எங்களைத் தீவிரவாதிகள் என்று முத்திரைக் குத்தி தடை செய்யப்பட்ட அமைப்புகளாகவே அவைநடத்துகின்றன.
மேலும் சர்வதேச அங்கீகாரம் கிடைப்பதையும் தடுக்கின்றன. இந்த நாடுகள் தங்களது அரசியல் ஆதாயத்துக்காகஎங்கள் மக்களின் சுதந்திரத்துக்கு தடைபோடப் பார்க்கின்றன என்று கூறியுள்ளார்.
பெயர்களை பாலசிங்கம் குறிப்பிடாவிட்டாலும். அவர் குறிப்பிடும் நாடுகள் அமெரிக்காவும் இந்தியாவும் தான்என்பது தெளிவாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications