ஜெர்மனியில் இருந்து வாஜ்பாய் இன்று ரஷ்யா பயணம்
செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்:
தனது ஜெர்மன் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் வாஜ்பாய் இன்று ரஷ்யா செல்கிறார்.
செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் 300வது ஆண்டுக் கொண்டாட்டங்களில் பங்கேற்கும் அவர் ரஷ்ய அதிபர்விளாடிமிர் புடின், பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர், பிரஞ்சு அதிபர் சிராக், சீனா அதிபர் ஹு ஜின்டாவ்ஆகியோருடன் சர்வதேசத் தீவிரவாதம், ஈராக் விவகாரம், இந்தியா- பாகிஸ்தான் நிலவரம்ஆகியவை குறித்து விவாதிக்கவுள்ளார்.
மேலும் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷையும் அவர் சந்திக்க வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.
இரண்டாம் உலகப் போரில் ஹிடலரின் நாஜிப் படைகளுக்கும் ரஷியப் படைகளுக்கும் பயங்கரயுத்தம் நடந்த நகரம் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க். உலக வரலாற்றில் பல்வேறு முக்கிய திருப்புமுனைகளுக்குக்காரணமாக இருந்த இந்த நகர் விளாடிமிர் புடினின் சொந்த ஊராகும்.
இந்த நகரின் ஆண்டு விழாவையொட்டி நேவா நதியில் சில்வர் விஸ்பர் என்ற பிரம்மாண்டமானகப்பலில் 45 உலக நாடுகளின் தலைவர்களுக்கு புடின் சிறப்பு இரவு விருந்தளிக்கிறார். இதிலும்வாஜ்பாய் கலந்து கொள்வார்.
பிரஞ்சு அதிபர் சிராக்கின் அழைப்பையேற்று வரும் ஞாயிற்றுகிழமை வாஜ்பாய் பிரான்ஸ்செல்கிறார். அங்கு ஈவான் நகரில் நடைபெறும் ஜி-8 நாடுகளின் மாநாட்டில் சிறப்புஅழைப்பாளராக வாஜ்பாய் பங்கேற்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications