துபாய்: 2 தாவூத் கூட்டாளிகள் இந்தியாவிடம் ஒப்படைப்பு
மும்பை:
மும்பை தாதவான தாவூத் இப்ராஹிமின் 2 கூட்டாளிகளை துபாய் அரசு கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது.
மும்பையில் பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரியாஸ் சித்திக் மற்றும் ராஜ்குமார் சர்மாஆகியோர் தாவூத் இப்ராகிம் துணையோடு துபாய்க்குத் தப்பினர். அங்கிருந்த வண்ணம் மும்பையில் பல்வேறு குற்றங்களைத் திட்டமிட்டுநடத்தி வந்தனர்.
இவர்களைப் பிடிக்க மும்பை உயர் நீதிமன்றம் சர்வதேச ரெட் கார்னர் நோடீஸைப் பிறப்பித்தது. இதையடுத்து இவர்களைக் கைது செய்ததுபாய் போலீசார் உடனே இந்தியாவுக்குத் தகவல் தந்தனர்.
இதைத் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் குழு துபாய் சென்று இந்த இருவரையும் கைது செய்து நேற்றிரவு மும்பைக்கு விமானத்தில்கொண்டு வந்தனர். மும்பை சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இவர்களை மும்பை கிரைம் பிராஞ்ச் போலீசார் கைது செய்தனர்.
இவர்களையும் சேர்த்து தாவூதின் கூட்டாளிகள் 8 பேரை துபாய் அரசு இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது. முன்னதாக மஞ்சு முஸ்தபா,இஜாஸ் பதான் , இம்ரான் ரஹ்மான் கான் , இக்பால் கஸ்கர் , முகம்மது அல்தாப் மற்றும் அனில் பரப் ஆகிய 6 பேரை துபாய்அரசு இந்தியாவிடம் பிடித்துக் கொடுத்தது.
பதானும் , முஸ்தபாவும் 1993ல் மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடையவர்கள். அல்தாப் மீது பொடாவழக்கு உள்ளது.
கஸ்கர் திருட்டு மற்றும் கொள்ளை வழக்கிலும், பரப் தன் மனைவியின் கொலை வழக்கிலும் பாலுவுட் நட்சத்திரங்களை மிரட்டிபணம் பறித்த வழக்கிலும் தேடப்பட்டு வந்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications