எஸ்.எஸ்.எஸ்.சி.: 78.2 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி- பாளையங்கோட்டை மாணவி முதலிடம்
சென்னை:
தமிழகத்தில் 10ம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) தேர்வு முடிவுகள் இன்று வெளியாயின. இந்தத் தேர்வுகளில் 78.2சதவீத மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த ஆண்டு 7,36,331 மாணவ, மாணவிகள் 10ம் வகுப்புத் தேர்வெழுதினர். இதில் வழக்கம்போல் மாணவர்களைவிட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவிகள் 80.7 சதவீதமும் மாணவர்கள் 75.7சதவீதமும் தேர்ச்சியடைந்துள்ளனர்.
பாளையம்கோட்டை சாரா டக்கர் மகளிர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவியான ஆஷா பெனாசிர் மாநிலஅளவில் முதலிடம் பெற்றுள்ளார். இவர் 500க்கு 494 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
செங்கோட்டை எஸ்.ஆர்.எம். பள்ளியைச் சேர்ந்த கிருஷ்ணப்பிரியா 493 மதிப்பெண்கள் எடுத்து இரண்டாவதுஇடத்தைப் பிடித்துள்ளார்.
பாளையம்கோட்டை சாரா டக்கர் பள்ளி மாணவியான பானுப்பிரியா, தூத்துக்குடி ஹோலி கிராஸ் பள்ளிமாணவியான ராஜேஸ்வரி, நாமக்கல் அருகே உள்ள காந்தம்பாளையம் காந்தி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்தராஜேந்திரன் ஆகியோர் மாநில அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர். இவர்கள் 500க்கு 493மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் பட்டியல்கள் ஜூன் 11ம் தேதி முதல் வழஙகப்பட உள்ளன. மாணவர்கள் தாங்கள்பயின்ற பள்ளிகளில் இந்தப் பட்டியல்களைப் பெற்றுக் கொள்ளலாம். தனியாக தேர்வு எழுதியவர்கள்தேர்வெழுதிய பள்ளியில் இந்த மார்க் ஷீட்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
தேர்வில் 3 பாடங்களில் மட்டும் தோல்வியடைந்த மாணவர்கள் உடனடியாக மறு தேர்வு எழுத அனுமதிக்கப்படஉள்ளனர். இதற்கான விண்ணப்பங்களும் ஜூன் 11ம் தேதி முதல் வழங்கப்படும். அடுத்த மாத இறுதியில் இந்தசிறப்பு துணைத் தேர்வு நடைபெறவுள்ளது.இதன்மூலம் ஓராண்டு காலத்தை வீணடிக்காமல் உடனடியாகத்தேர்வெழுதி பிளஸ் ஒன் மற்றும் பிற கல்விகளில் சேர மாணவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.
விடைத்தாள்களை மறுமதிப்பீடு (re total) செய்ய விரும்பும் மாணவர்கள் ஒரு பாடத்துக்கு ரூ. 200 செலுத்தி வரும்2ம் தேதி முதல் 6ம் தேதிக்குள் விண்ணப்பிக்கஸாம்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்ச்சி விகிதம் 2.7 சதவீதம் அதிகரித்துள்ளது.
மொத்தம் 12,036 பேர் கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதேபோல3,654 பேர் அறிவியலில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications