செயற்கை மழை: ஜெயலலிதாவுக்கு வீரமணி ஐஸ் மழை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சில்வர் அயோடைடு போலவே சாதாரண உப்பை மேகங்களில் தூவினாலும் மழை வரும் என்றுஎன்று திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், சென்னை நகரில் செயற்கை மழை பெய்விக்கமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளது பாராட்டுக்குரியது.இந்த முயற்சி வரவேற்புக்குரியது.
சில்வர் அயோடைடை தூவுவது போல, சாதாரண உப்பைத் தூவினாலும் மழை வரும் என்றுநிபுணர்கள் கூறுகிறார்கள். அந்தக் கருத்தையும் முதல்வர் ஜெயலலிதா பரிசீலிக்க வேண்டும்.
புதிய தொழில்நுட்பத்தை தமிழகத்தில் அறிமுகப்படுத்துவதன் மூலம் மாநிலத்திற்கு ஜெயலலிதா புதியபெருமையை சேர்த்துள்ளார் என்று கூறியுள்ளார் கி.வீரமணி.












Click it and Unblock the Notifications