அதிமுக எம்.எல்.ஏ. திவால் ஆனவராக நீதிமன்றம் அறிவிப்பு: பதவி பறிபோகும்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை அருகே உள்ள மதுராந்தகம் சட்டசபைத் தொகுதி உறுப்பினர் பி.வாசுதேவனை திவால்ஆனவராக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து அவரது எம்.எல்.ஏ.பதவி பறிபோகும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

மதுராந்தகம் அதிமுக எம்.எல்.ஏவாக இருப்பவர் வாசுதேவன். இவர், வெங்கட்ரமணி என்பவரிடம்கடந்த 1998ம் ஆண்டு ரூ. 68,805 மதிப்புள்ள எலெக்ட்ரானிக் பொருட்களை வாங்கினார். ஆனால்அந்தப் பணத்தை திருப்பித் தராமல்இருந்து வந்தார்.

இதைத் தொடர்ந்து உள்ளூர் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார் வெங்கட்ரமணி. அதில் அவருக்குசாதகமாக தீர்ப்பு வந்தது. ஆனால் தீர்ப்புக்குப் பிறகும், பணத்தைத் திருப்பிச் செலுத்தாமலும், கோர்ட்தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யாமலும் இருந்து வந்தார் வாசுதேவன்.

இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வாசுதேவனை திவால் ஆனவராக அறிவிக்க கோரி மனுசெய்தார் வெங்கட்ரமணி. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராமமூர்த்தி 1909ம் ஆண்டு சென்னைமாகாண திவால் சட்டத்தின் 9(2)வது பிரிவின் கீழ் வாசுதேவனை திவால் ஆனவராக அறிவித்தார்.

மேலும், வாசுதேவனுக்கு சொந்தமான, செய்யாறு அருகே இருக்கும் ரைஸ் மில்லை கோர்ட்டிடம்ஒப்படைக்கவும் உத்தரவிட்டார்.

திவால் ஆனவராக அறிவிக்கப்பட்டவர்கள் அரசுப் பதவியில் நீடிக்க முடியாது என்பதுகுறிப்பிடத்தக்கது. இதனால் வாசுதேவனின் எம்.எல்.ஏ. பதவி பறிபோகும் நிலை உருவாகியுள்ளது.

ஏற்கனவே எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் எம்.எல்.சி. பதவியில் வெண்ணிற ஆடை நிர்மலாவைநிறுத்த எம்.ஜி.ஆர். முயற்சித்தார். அந்த சமயத்தில் அவரை திவால் ஆனவராக நீதிமன்றம்அறிவித்ததால் எம்.எல்.சி. ஆவதில் அவருக்கு சிக்கல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+