திமுக தலைவர் தேர்தல்: இன்று வேட்பு மனுத் தாக்கல் தொடக்கம்
சென்னை:
திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்றுதொடங்குகிறது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் 12-வது உட்கட்சித் தேர்தல் மாநில அளவில் நடந்து முடிந்துள்ளது.பல மோதல்களையும், அடிதடிகளையும், உச்சகட்டமாக மூத்த தலைவர் ஒருவரின்படுகொலையையும் சந்தித்துள்ள இந்த தேர்தல் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கான வேட்பு மனுக்கள் இன்று முதல் தாக்கல்செய்யலாம். ஜூன் 2ம் தேதி இப்பதவிகளுக்குரியவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
தற்போது இப்பொறுப்பில் உள்ள மு.கருணாநிதி, க.அன்பழகன் ஆகியோரே மீண்டும்இப்பதவிகளுக்கு தேர்வு செய்யப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆற்காடு வீராசாமிவிஷயத்தில் கொஞ்சம் குழப்பம் இருந்தது. ஆனால், அவருக்குப் பதிலாக வேறு யாரையும் கொண்டுவந்தால் இன்னும் குழப்பம் ஏற்படும் சூழ்நிலை. இதனால் அவரையே மீண்டும் பொருளாளராக்கதிமுக முடிவு செய்துள்ளது.
இந்தப் பதவிகளுக்கு இவர்கள் மட்டுமே மனுத் தாக்கல் செய்வார்கள். ஜூன் 2ம் தேதிஅதிகாரப்பூர்வமாக இவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், பொதுச் செயலாளர் மற்றும் பிற மூத்த தலைவர்களின்ஆலோசனையின்படி 3 துணைப் பொதுச் செயலாளர்களை நியமிப்பார்.
தற்போது அந்தப் பதவியில் சுப்புலட்சுமி ஜெகதீசன், பொன்னேரி சுந்தரம் ஆகியோர் உள்ளனர்.மூன்றாவது துணைப் பொதுச் செயலாளராக இருந்த நாஞ்சில் மனோகரன் இறந்த பிறகு அப்பதவிகாலியாகவே உள்ளது.
புதிய துணைப் பொதுச் செயலாளர் பதவிகளுக்கு வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன், கோ.சி.மணி,டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் போட்டி போடுகின்றனர். ஸ்டாலினையும் துணைப் பொதுச்செயலாளராக்க கருணாநிதி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இருப்பினும் தா.கி. படுகொலை, அழகிரி கைது இவற்றிற்கிடையே, ஸ்டாலினுக்கு இந்த நேரத்தில்இப் பொறுப்பை வழங்க கருணாநிதி முன் வருவாரா என்று தெரியவில்லை.
ஜூன் 2ம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழுக் கூட்டத்தில் உட்கட்சித் தேர்தலில் வென்ற 1,200பிரதிநதிகளும், சிறப்பு பார்வையாளர்களாக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications