திமுக மாஜி அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு, பொதுப் பணித்துறையினர் சோதனை
திருச்சி:
தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மற்றும் புலவர் செங்குட்டுவன் ஆகியோரது வீடுகளில்மீண்டும் லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனை நடத்தினர். பொதுப் பணித்துறையின்பொறியாளர்களுடன் வந்த போலீசார் இவர்களுக்குச் சொந்தமான கட்டடங்களை மதிப்பீடுசெய்தனர்.
கடந்த தி.மு.க. ஆட்சியின் போது உணவு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்தார் கே.என்.நேரு. கால்நடைத்துறை அமைச்சராக இருந்தார் புலவர் செங்குட்டுவன்.
அதிகாரத்தில் இருந்தபோது இருவரும் தங்கள் குடும்பத்தினர் மற்றும் பினாமிகள் பெயரில்சொத்துகள் குவித்தாகக் கூறி லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணையை ஆரம்பித்தனர்.
திருச்சி தில்லைநகர் மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள நேருவின் வீடு மற்றும் உறவினர்களின்வீடுகளில் லஞ்ச ஒழிப்பு பேலீசார் ரெய்டு நடத்தினர். மேலும் அவருக்குச் சொந்தமான மஞ்சள்மண்டி, தொழிற்சாலையிலும் அடிக்கடி ரெய்ட் நடத்தப்பட்டது.
இதே போல மருங்காபுரி தொகுதிக்குட்பட்ட வேலக்குறிச்சி கிராமத்தில் உள்ள முன்னாள் அமைச்சர்புலவர் செங்குட்டுவனுனின் வீடு மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புபோலீஸார் சோதனை மேற்கொண்டு பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி சென்றனர்.
இந் நிலையில் இப்போது கே.என்.நேருவிற்கு சொந்தமாக தில்லைநகர் 10வது கிராஸில் உள்ளவீட்டிற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் வந்த புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.கோவிந்தராஜன் மற்றும் போலீசார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக அந்த வீட்டை மதிப்பீடுசெய்தனர்.
மேலும் நேருவின் சொந்த ஊரான லால்குடி தொகுதிக்குட்பட்ட கானகிளியநல்லூர் மற்றும்பெருவளநல்லூர் ஆகிய பகுதியில் உள்ள வீட்டிலும் சொத்து மதிப்பிடும் பணியிலும் ஈடுபட்டனர்.
இதேபோன்று வேலக்குறிச்சி கிராமத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் புலவர் செங்குட்டுவனின்வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சொத்து மதிப்பிடும் பணியை மேற்கொண்டனர்.
இரு வாரங்களுக்கு முன் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயத்திற்கு சொந்தமாக ராம்ஜிநகர் பகுதியில்உள்ள கிரானைட் நிறுவனத்தில் மதிப்பையும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கணக்கிட்டதுகுறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications