திமுகவும் வேண்டாம்.. அதிமுகவும் வேண்டாம்: காங்கிரஸ்
திருச்சி:
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுடனும் காங்கிரஸ் கூட்டணி வைத்துக்கொள்ளாது என அக் கட்சியின் மாநிலத் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் கூறினார்.
திருச்சியில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர்,
மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள். அடுத்தநாடாளுமன்றத் தேர்தலில் சோனி காந்தி தலைமையில் காங்கிரஸ் பெறும் பெற்று மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும்.
சோனியா காந்தியைத் தான் பிரதமராக அறிவித்து காங்கிரஸ் தேர்தலை எதிர்கொள்ளும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுகவின் ஆட்சிகளால் மக்கள் வெறுத்துப் போய்விட்டார்கள். இந்தக்கட்சிகளுக்கு மாற்றாக ஒரு அணியை காங்கிரஸ் உருவாக்கும். இக் கட்சிகளுடன் இனி வரும் தேர்தலில் கூட்டணிவைக்க மாட்டோம்.
கோஷ்டிப் பூசல் என்பது எல்லா கட்சிகளிலும் உள்ளது தான். அது காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமேஉரிமையானதல்ல.
தமிழகத்தின் வறட்சி நிலவரத்தை மத்திய அரசிடம் உரிய முறையில் எடுத்துச் சொல்லி நிவாரணம் பெற அரசுதவறிவிட்டது. ஜெயலலிதாவின் செயலற்றதன்மையால் பாதிக்கப்பட்டது ஏழை விவசாயிகள் தான்.
கர்நாடகத்திடம் இருந்து காவிரி நீரைப் பெற காங்கிரஸ் கட்சியும் தன்னால் முடிந்த முயற்சிகளைச் செய்யும். அம்மாநில முதல்வரிடம் இது குறித்துப் பேசுவோம்.
ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படாவிட்டால் மீண்டும் தஞ்சாவூர், திருச்சி, கடலூர், நாகைமாவட்ட விவசாயிகள் வாடுவார்கள். இதன் மூலம் இந்த ஆண்டும் பயிர் விளைச்சல் பாதிக்கப்பட்டுகாவிரி டெல்டா பகுதியே கருகிப் போய் விடும். தமிழகத்தின் எதிர்காலமே இருண்டு போய் விடும்என்றார் அவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications